July 16, 2026
  • July 16, 2026
Breaking News
January 17, 2020

நம் கண்களையே நம்ப முடியாத எம்ஜிஆர் வீடியோ

By 0 1097 Views

Thalaivi Arvind Swamy first lookஇன்று எம்ஜிஆர் பிறந்த தினம் உலகெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று கதையான தலைவி படத்தின் ஒரு செய்தி நம் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

தலைவி படத்தில் ஜெயலலிதாவாக பிரபல இந்தி நடிகை கங்கனா ரனவத் நடித்தது ஆச்சரியத்தை தந்தது. அவர் உருவப் பொருத்தம் அப்படியே ஜெயலலிதாவுடன் பொருந்தி வருமாறு அதன் முதல் பார்வை அமைந்திருந்தது.

Arvind Swamy's first look in Thalaiviஇன்று எம்ஜிஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு அதே தலைவி படத்தில் எம்ஜிஆர் ஆக வேடம் ஏற்றிருக்கும் அரவிந்த சாமியின் முதல் பார்வை புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எம்ஜிஆர் போலவே அரவிந்தசாமி தெரிவது மிக ஆச்சரியத்தை தந்துள்ளது.

புகைப்படங்கள் மட்டுமல்லாது அரவிந்தசாமி எம்ஜிஆர் ஆக நடிக்கும் ஒரு வீடியோ துணுக்கும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கருப்பு வெள்ளையில் அமைந்திருக்கும் அந்த வீடியோவில் உண்மையிலேயே நிஜ எம்ஜிஆர் நடித்து இருப்பது போன்று அரவிந்த சாமியின் வேடம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.

நம் கண்களையே நம்ப முடியாத அளவில் எம்ஜிஆர் ஆகவே தோற்றம் தருகிறார் அரவிந்தசாமி. நீங்களும் அந்த வீடியோவை கண்டுகளியுங்கள்.

வீடியோ கீழே…