April 19, 2025
  • April 19, 2025
Breaking News
July 11, 2019

அஞ்சலியை ஒருதலையாய் காதலிக்கும் யோகிபாபு

By 0 840 Views
 

கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் ‘தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ சார்பில் தயாரிக்கும் ‘ஃபேண்டஸி காமெடி’ படத்தில் நடிக்க தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ள தயாராக உள்ளார் அஞ்சலி. கூடுதல் ஈர்ப்பாக யோகிபாபு மற்றும் விஜய் டிவி புகழ் ராமர் ஆகியோரை முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக நடிக்கிறார்கள்.

இது குறித்து தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பாளர் சினிஷ் கூறும்போது, “பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் எப்போதும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் அல்லது சமூக படங்களாக இருப்பது வழக்கம். நகைச்சுவைப் படமாக முயற்சித்தாலும் கூட, முழு நீள நகைச்சுவை படமாக இருப்பதில்லை. சுவாரஸ்யமாக, இந்த கதை தன்னை ஒரு முழுமையான ‘பேண்டஸி காமெடி’யாக மாற்றிக் கொண்டது..!” என்றார்.

அஞ்சலியை இந்தப் படத்துக்கு தேர்ந்தெடுத்ததன் காரணத்தை இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் கூறும்போது, “அஞ்சலி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியானவர் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா? என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, நான் அவருக்கு கதையை விவரிக்கையில், அவர் ஸ்கிரிப்டை ரசிக்க ஆரம்பித்தார்.

சமீப காலங்களில் யோகிபாபு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார், அவரே முன்னணி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஆனாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், முழு படத்திலும் தோன்றுவார். அதே போல, அஞ்சலி மற்றும் யோகி பாபு ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ராமரும் முழு படத்தில் இருப்பார்..!” என்றார். 

அர்வி ஒளிப்பதிவு செய்யும் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க இருக்கிறது.