அவதார் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனின் ALIENS (1986) ஏலியன்ஸ் சிறந்த அறிவியல் புனை கதைகளில் ஒன்றாக இப்போது வரை இருக்கிறது!
இதுவரை இதை வைத்து பல தொடர் படம்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆனால், இன்றும் James Cameron’s (ஜேம்ஸ் கேமரூனின்) ALIENS (1986) (ஏலியன்ஸ்) விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களால் மிக அதிகமாக மதிப்பிடப்படுகிறது!
வேற்றுகிரகவாசிகள் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற கருத்தின் வரிசையில், இந்த சமீபத்திய படம், ஏலியன்ஸ் 2042.
மே 26, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் இந்தப்படம் இந்தியாவில், 6 மொழிகளில் வெளியாகிறது. 2042-ம் ஆண்டு எதிர்காலத்தில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது…
கதை இதுதான் – தாய் பூமியில் காணப்படும் நீர் ஆதாரங்களைக் கண்டு பூமியை வசப்படுத்தும் நோக்கில், ஏலியன்கள் உலகின் அனைத்து முக்கிய நகரங்கள் மீதும் ஒரு பெரிய தாக்குதலை நடத்துகிறார்கள். ஏலியன்களுக்கு எதிராக போராட உலக நாடுகள் ஒன்றுபடுகிறார்கள்!
மற்ற அனைத்து இராணுவப் படைகளும் தோற்கடிக்கப்பட்ட பிறகு, விட்டுச் சென்ற சீன இராணுவமும் தோற்கடிக்கப்படுகிறது! தப்பிப்பிழைத்தவர்களில் செங் லிங் என்ற ஆர்வமுள்ள இளைஞர் ஒருவர் இருக்க,
இவரோ காவோ ரெனுடன் காதலில் விழுகிறார். தனது காதலியின் மீதான காதலைத் தொடரும்போது, செங்கிற்கு உயிருக்கே ஆபத்து ஏற்படும்படியான கட்டாயம் ஏற்படுகிறது.
வேற்றுகிரகவாசிகளால் மனித இனத்தின் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் பொறுப்பை ஏற்க நேர்கிறது! அதை மேற்கொண்டு உலகை அவரால் ஏழியங்களிடமிருந்து காப்பாற்ற முடிந்ததா என்பதை பரபர ஆக்ஷன் உடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹுவாங் சூசெங் (Huang Zhuasheng)
ரெங் டியானே, ஜாங் சிலு, கு நிகிரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை கியூ ஹேங் சு ஏற்றிருக்கிறார்.
குழந்தைகளை கவரும் படம் என்பதால் குடும்பத்தினர் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்.
777 பிக்சர்ஸ் மூலம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் & இந்தி என 6 மொழிகளில் வெளியிடப்படுவது சிறப்பு.