January 30, 2026
  • January 30, 2026
Breaking News
May 1, 2021

தல பிறந்தநாளில் ரசிகர்கள் இரத்ததானம்

By 0 616 Views

தமிழ் சினிமாவில் தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சிவகாசியில் அஜித் ரசிகர்கள் மற்றும் அன்பு தடம் அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது, பல தரப்பிலும் பாராட்டை பெற்று வருகிறது.

அண்மைக் காலமாக இரத்த தேவை அதிகமாகி தானம் குறைந்து வருவதால் குழந்தைகள் பலர் பெரும் பாதிப்படைந்து வருவதாக செய்தி வந்த சூழலில் இன்று பல்வேறு மாவடங்களில் அஜித் ரசிகர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்ததானம் அளித்தனர்.

அப்படி அரசு மருத்துவ மனை மருத்துவ குழுவினர் தானமாகப் பெறப்பட்ட ரத்தத்தை சேமித்து பாதுகாப்புடன் அரசு மருத்துவமனை இரத்ததான வங்கிக்கு கொண்டு சென்றனர்.

முன்னதாக இரத்ததானம் கொடுக்க வந்தவர்களுக்கு கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் முகக்கவசமும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் இரத்ததானம் அளித்த அனைவருக்கும் உடல் புத்துணர்வு பெறும் விதமாக சான்றிதழ் வழங்கி 5 கிலோ அரிசிப்பை இலவசமாக வழங்கப்பட்டது.

 ‘தல ‘யாய சேவை. பாராட்டுவோம்..!