September 19, 2026
  • September 19, 2026
Breaking News
December 31, 2018

ஐரா வில் நயன்தாரா பட்ட கஷ்டம் தீர்ந்தது

By 0 1109 Views

‘ஐரா’வில் நயன்தாரா இரட்டை கதாபாத்திரங்கள் ஏற்கிறார் என்ற செய்தி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருக்கிறது. குறிப்பாக யாரும் கற்பனை செய்து பார்க்காத ஒரு கருப்பு நிற பெண்ணாகவும் அவரே நடித்திருப்பது வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

படக்குழு படத்தை குறித்த நேரத்தில் முடித்திருக்கிறது என்பது இன்னொரு மகிழ்ச்சியான செய்தி.

ஐரா (யானை) பற்றி பொதுவான செய்தி. இது ஒரு சூப்பர்நேச்சுரல் திரில்லர் படம். கலையரசன், யோகிபாபு, ஜே.பி மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். கார்த்திக் ஜோகேஷ் எடிட்டிங் செய்ய, சுதர்ஷன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

‘அவள்’ பட புகழ் சிவ சங்கர் கலை இயக்குனராகவும், டி ஏழுமலை நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். கதை & திரைக்கதை பிரியங்கா ரவீந்திரன், வசனம் எழுதி இயக்கியிருப்பவர் கேஎம். சர்ஜூன்.

“நயன்தாராவுடன் பணிபுரிவது மகிழ்ச்சியான அனுபவம், ஒவ்வொரு படத்திலும் பல்வேறு கதாபாத்திரங்களை பரிசோதனை செய்து பார்க்கும் அவரது திறமையை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில், அவரின் நடிப்பு எங்கள் முந்தைய படமான ‘அறம்’ படத்தில் இருந்து ‘ஐரா’வில் இன்னும் மேம்பட்டு இருக்கிறது.

ஒரே நேரத்தில் பல படங்களில், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், ‘ஐரா’விற்கு அவர் தந்த முக்கியத்துவம் சிறப்பானது. உண்மையில், அவரின் இரண்டு கதாபாத்திரங்களில் வித்தியாசமாக வரும் கருப்பு நிற கதாபாத்திரத்துக்கு கடும் உழைப்பு தேவைப்பட்டது. அதை அவர் சிறப்பாக செய்தார்..!” என்றார் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே ராஜேஷ்.

படத்தின் இயக்குனர் கேஎம். சர்ஜூன் பற்றி அவர் கூறும்போது, “தொடக்கத்தில் இருந்து இறுதி வரை தயாரிப்பாளரின் இயக்குநராக அவர் இருந்திருக்கிறார். தனது திறமைகளை நிரூபிக்கும் திரைப்படமாக மட்டும் இதை கருதாமல், நயன்தாராவுக்கு ஒரு சிறப்புப் படமாக இருக்க வேண்டும் என உழைத்தார்..!”

அதுதான் படம் முடிஞ்சிடுச்சு இல்ல… அப்ப எல்லார் பட்ட கஷ்டமும் தீர்ந்தது விடுங்க..!