முன்னொரு காலத்தில் கடவுளின் தேசமென்று சொல்லப்படும் கேரளாவில் வசித்து வரும் நடிகை ஷம்னா காஸிம், தமிழில் பூர்ணா என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த பூர்ணாவின் திருமணம் குறித்துப் பேச வேண்டும் என அவரது பெற்றோரை ஒரு கும்பல் தொடர்புகொண்டது. அவர்கள் தங்கள் வீடு கோழிக்கோடு என்று கூறியதுடன் மாப்பிள்ளை துபாய் உள்ளிட்ட பல பகுதிகளில் நகைக்கடை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்களாம்.
பூர்ணா-வின் உற வினர் சொrன்னதால் அந்தக் கும்பலை பூர்ணாவின் பெற்றோர் நம்பினர். போனில் பேசிக்கொண்டிருந்தவர்கள் பூர்ணாவைப் பெண் பார்க்க அவரது வீட்டுக்கு வருவதாகக் கூறியுள்ளனர். அவர்களின் கனிவான பேச்சை நம்பி வீட்டுக்கு வர சம்மதித்துள்ளனர்.
வீட்டுக்கு வந்தபிறகு அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து பூர்ணாவுக்குச் சந்தேகம் வந்திருக்கிறது.
இதையடுத்து அவர்கள் கொடுத்த கோழிக்கோடு முகவரியில் விசாரித்தபோது அது போலியானது என்று தெரிய வந்திருக்கிறது.
இதற்கிடையில் ஐதராபாத்தில் இருந்த பூர்ணாவின் மொபைல் எண்ணுக்கு அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் போன் செய்து துபாயில் உள்ள பிசினஸ்க்காகப் பத்து லட்சம் ரூபாய் உடனடியாக தேவைப்படுவதாகக் கேட்டுள்ளார். அந்த நபர் மீது சந்தேகமடைந்த பூர்ணா அம்மாவிடம் கேட்டுவிட்டுத் தருவதாகக் கூறியுள்ளார்.
அவசரம் என்பதால் அம்மாவிடம் கேட்கவேண்டாம் உடனடியாகப் பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். சந்தேகம் வலுத்ததால் போன் செய்தது யார் என்று அறிய வீடியோ கால் செய்யும்படி பூர்ணா சொன்ன அடுத்த நொடி போனை கட்டாக்கிய அவர் உடனே சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டாராம்.
அதே சமயம் அந்தக் கும்பல் பூர்ணாவின் பெற்றோருக்கு போன் செய்து பணம் தராமல் இருந்தால் பூர்ணாவின் கேரியரை நாசம் செய்துவிடுவோம் என அந்த கும்பல் மிரட்டியுள்ளது.
இதுகுறித்து பூர்ணாவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரைக் கைது செய்தனர். அந்த நான்கு பேரின் புகைப்படங்கள் மீடியாக்களில் வெளியானதைப் பார்த்த ஆலப்புழாவைச் சேர்ந்த மாடலிங் நடிகை ஒருவர் உட்பட் ஏகப்பட்ட பேர் புகார் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
சினிமா நடிகை கிட்டேயே ரீலா?