October 19, 2025
  • October 19, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • காஜல் அகர்வாலுக்கு திருமணம் அக்டோபர் 30 ல் நடக்கிறது
October 6, 2020

காஜல் அகர்வாலுக்கு திருமணம் அக்டோபர் 30 ல் நடக்கிறது

By 0 531 Views

காஜல் அகர்வால் இந்தி நடிகையாக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தென்னக முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஒரே நேரத்தில் அஜித்-விஜய் இருவருடனும் ஜோடி போட்ட நடிகை என்ற பெருமையும் அவருக்கு உண்டு. 

இந்நிலையில் ஒரு திடீர் அறிவிப்பை செய்து இருக்கிறார் காஜல் அகர்வால். ரசிகர்களுக்கு அந்த செய்தி ஷாக் ஆக இருந்தாலும் அவரைப் பொருத்தவரை அவர் வாழ்வின் இனிமையான தருணம் அது.

ஆம்… அவருக்கு திருமணம் நடைபெறவிருக்கிறது. மணமகன் பெயர் கௌதம். அக்டோபர் 30 அன்று குறைவான விருந்தினர்களுடன் நடக்கவிருக்கும் திருமணம் குறித்து காஜல் அகர்வால் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இதில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையவும் ஒரு செய்தி இருக்கிறது. அதாவது திருமணத்துக்கு பின் அவர் மீண்டும் நடிப்பார் என்ற தகவல்தான் அது. அதையும் அவரே தெரிவித்திருக்கிறார்.

வாழ்க மணமக்கள்..!