July 27, 2024
  • July 27, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • டோனி யாக நடித்த பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை
June 14, 2020

டோனி யாக நடித்த பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை

By 0 658 Views

நட்சத்திர கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ’எம்.எஸ்.டோனி – தி அண்டோல்ட் ஸ்டோரி’ (M.S. Dhoni: The Untold Story).

இந்த திரைப்படத்தில் டோனியின் வேடத்தில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

Sushanth Singh committed suicide

Sushanth Singh committed suicide

34 வயதாகும் இவர் திடீரென்று மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட செய்தி ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகையே உலுக்கி இருக்கிறது.

’கை பே சே’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக இந்தி சினிமாவில் அறிமுகமான சுஷாந்த் சிங், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்ததோடு, டோனியின் வாழ்க்கை திரைப்படத்தில் டோனியாக நடித்து அசத்தினார். அதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்களு க்கும் அறிந்த முகமானார்.

இவரதுநடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான மூன்று படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

இத்தனை சிறிய வயதில் புகழ் மிக்க வாழ்வில் அவருக்கு என்ன மன அழுத்தம் இருந்தது என்று தெரியவில்லை. தன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் சுஷாந்த்.

Disha Salian commited suicide last week

Disha Salian commited suicide last week

இவரிடம் மேனேஜர் ஆக இருந்த திஷா சாலியன் கடந்த 8 ஆம் தேதி 14 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத் தக்கது.