August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அப்துல் கலாம் அறிமுகத்தில் ஏஆர் ரஹ்மான் உருவாக்கிய இசையமைப்பாளர்
September 17, 2019

அப்துல் கலாம் அறிமுகத்தில் ஏஆர் ரஹ்மான் உருவாக்கிய இசையமைப்பாளர்

By 0 764 Views
Music Director Hithesh Manjunath

Music Director Hithesh Manjunath

தினேஷ் நடித்திருக்கும் காதல் படம் ‘நானும் சிங்கள் தான்’

அறிமுக இயக்குனர் கோபி இயக்கியுள்ள இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத் ஏ.ஆர். ரகுமான் பள்ளியில் இருந்து வந்தவர். இவரை பற்றி சுவாரசியமான தகவல் ஒன்று இருக்கிறது.

தனது 10 வயதில் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜேஅப்துல்கலாம் அவர்களின் முன்னிலையில் சிறப்பு விருது பெற்றவர். அப்போது அப்துல்கலாம் இவரிடம் “நீ என்னவாக வேண்டும்..?” என கேட்டபோது “நான் விஞ்ஞானி ஆக விரும்பவில்லை , ஏ.ஆர். ரகுமான் போல பெரிய இசை அமைப்பாளர் ஆக வேண்டும்..!” என்று கூறி இருக்கிறார்.

இதைக் கேட்டதும் அப்துல்கலாம் ஆச்சரியமுற்று அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஏ.ஆர்.ரகுமானிடம் அப்போதே அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். அந்த அறிமுகத்தை வைத்து சென்னைக்கு வந்து ரகுமானிடம் இசைப் பயிற்சியும் பயின்றிருக்கிறார் ஹித்தேஷ் மஞ்சுநாத்.

Naanum single thaan

Naanum single thaan

தற்போது இந்த படத்தில் மூன்று பாடலுக்கு இசையமைத்துள்ளார் அவர். இந்தப் படத்தின் பாடல்கள் முழுக்க முழுக்க காதல் பாடல்களாக உருவாகியுள்ளன. இவை இந்த வருடத்தின் சிறந்த காதல் பாடல்களாக வலம் வரும் என நம்பிக்கை தெரிவிக்கிறது படக்குழு.