July 14, 2025
  • July 14, 2025
Breaking News
September 14, 2019

மோடி அரசில் அனிமல் கிளியரன்ஸுக்கு 3 லட்சம் லஞ்சம்

By 0 1077 Views

‘ஜெமினி சினிமாஸ்’ ஜெனிமி ராகவா மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’. கே.எஸ்.முத்து மனோகரன் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

அவர்களில் தயாரிப்பாளர் கே.ராஜனின் பேச்சு அதிர்ச்சியலைகளை சென்சார் பற்றிய உருவாக்கியது. அவர் பேச்சிலிருந்து…

“எப்போதுமே ஆண்கள் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும். ஏன்னா இப்போ ‘மீடூ’ என்ற விசயம் வந்த பின் ஆண்களுக்குப் பாதுகாப்பே இல்லை.

எல்லாரும் முதல் போட்டு படமெடுப்பார்கள். இந்தத்தயாரிப்பாளர் முதலைகளைப் போட்டு படமெடுத்துள்ளார். இப்போது நடிகர்களை வைத்து படமெடுப்பதே கஷ்டம். இவர்கள் முதலையை வைத்து சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். ட்ரைலரே நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக நல்லாருக்கும். குறிப்பாக இசை நன்றாக இருந்தது. அதனால் இது வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை.

சூட்டிங்கில் இடையில் நாய் வந்தால் கூட இப்போது சென்சாரில் பிரச்சனை வருகிறது. மோடி அரசு நல்லா போகுறதா சொல்றாங்க. ஆனால் அனிமல் க்ளீயரன்ஸ் வாங்குவதற்கு சென்சாரில் லஞ்சம் இருக்கு. போனமாசம் கூட ஒரு படத்திற்கு மூன்று லட்சம் வாங்கினார்கள். அனிமல் வெல்பேர் பிரச்சனையை சரி செய்வது படம் எடுப்பதை விட கஷ்டமாக இருக்கிறது.

ஆன்லைன் டிக்கெட் விசயத்தை நிர்மலா சீதாராமன் சரி செய்கிறேன் என்று சொன்னார். அதை இப்போது நமது அரசு செய்துள்ளது. அந்த ஆன்லைன் மூலமாக வரும் வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும்..!”