September 15, 2025
  • September 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 51வது சர்வதேச இந்திய திரைப்பட விழா நவம்பர் 20 முதல்…
June 22, 2020

51வது சர்வதேச இந்திய திரைப்பட விழா நவம்பர் 20 முதல்…

By 0 572 Views

51வது சர்வதேச இந்திய திரைப்பட விழா, இந்த வருடம் நவம்பர் 20 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா பங்கேற்பதற்கான நிகழ்ச்சியை காணொலி மூலம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தொடங்கி வைத்தார்.

பிரான்சின் கேன்ஸ் நகரில் 2020 கேன்ஸ் திரைப்பட விழா மே 12 ஆம் தேதியில் இருந்து 23 தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஜுன் இறுதி அல்லது ஜுலை துவக்கத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அதற்கான தொடக்க விழா, காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.