March 24, 2023
  • March 24, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தமிழகத்தை மீட்க வந்த இரண்டாம் பிரபாகரன் விஜய் – மதுரை போஸ்டரால் சர்ச்சை
June 23, 2020

தமிழகத்தை மீட்க வந்த இரண்டாம் பிரபாகரன் விஜய் – மதுரை போஸ்டரால் சர்ச்சை

By 0 405 Views

நேற்று நடிகர் விஜய்யின் பிறந்த நாள் இந்த கொரோனா காலத்திலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

வசூலில் ரஜினியை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் விஜய் இருப்பதால் அவரது பலம் தெரிந்த அத்தனை சினிமாக்காரர்களும் அவரை வாழ்த்த தயங்கவில்லை.

சினிமா பிரபலங்களே அப்படி என்றால் ரசிகர்களை பற்றி சொல்லத்தேவையில்லை. அதில் எல்லாவற்றிலும் உச்சமாக மதுரை பீ பீ குளத்தைச் சேர்ந்த ரசிகர் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள போஸ்டர் புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

தமிழின தலைவர் வே பிரபாகரன் அவர்களுடன் விஜய் அமர்ந்திருப்பது போல் ஒரு மார்பிங் புகைப்படத்தை வெளியிட்டதுடன் நில்லாமல் தமிழகத்தை மீட்டெடுக்க வந்த இரண்டாம் பிரபாகரனே என்று விஜய்யை புகழ்ந்தது ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

புகழ்வதற்கு ஒரு அளவுகோல் வேண்டாமா… சரித்திரம் தெரிந்து கொள்ள வேண்டாமா… இது விஜய்க்கும் அவப்பெயர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டாமா… பாமர ரசிகர்களே..!?