தமிழக அரசு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் எம் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
நீடித்த வணிக சென்னை: 2022 ஜூலை 20 : ஆகுமெண்டெட் ரியாலிடியில் (ஏஆர்) சிறந்து விளங்கும் தொழில்நுட்ப இயலுறு நிறுவனம் 4பாயிண்ட்2 டெக்னாலஜீஸ் ஆகும். வளர்ச்சிக்கு ஏஆர் தொழில்நுட்பத்தை உள்ளூர் தொழில் முனைவோர்கள் பயன்படுத்த உதவும் வகையில் இந்நிறுவனம் சென்னையில் தடம் பதித்துள்ளது. தமிழக அரசு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் எம் மதிவேந்தன், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 4பாயிண்ட்2 டெக்னாலஜீஸ் மேலாண்மைக் குழுவையும் அதன் தமிழ்நாடு சகாக்களையும் பாராட்டினார்.
4பாயிண்ட்2 பத்தாண்டுகளுக்கு முன்பே எஆர் தொழில்நுட்பம் அறிமுகமானாலும், இதன் முதிர்ந்த பதிப்பைத் தொழில்நுட்பமாக ங்குவதுடன், தீர்வாகவும், சேவையாகவும் வழங்க டெக்னாலஜீஸ் தீவிர முனைவுகளை மேற்கொண்டது. இந்த அதி நவீன படைப்புத் திறன் மிக்க தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களுடன் உணர்வுப்பூர்வத் தொடர்பை உருவாக்க வணிகங்களுக்கு உதவும்.
இது பற்றி 4பாயிண்ட்2 டெக்னாலஜீஸ் மேலாண் இயக்குனரும், நிறுவனருமான சிவக்குமார் கூறுகையில் ‘தமிழகம் மற்றும் சென்னை முழுவதுமுள்ள தொழில்நுட்ப முனைவுத் திறன் எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. எங்களது சேனல் கூட்டாளிகள் மூலம் அடுத்த 3 மாதங்களில் 100+ மக்களுக்கும், கார்பொரேட் மூலம் ஓராண்டுக்குள் 1000+ மக்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளோம்.
எங்களது தொழில்நுட்பம் வித்தியாசமான, பிரத்யேக, அதி நவீன எக்ஸ்பீரியன்ஷியல் மார்க்கெட்டிங்க் சொல்யூஷன்ஸ் மற்றும் சேவைகளைப் பல்வேறு முறையாக 4.0 துறைசார்ந்த நிறுவனங்களுக்கு வழங்கும். பிராந்தியத்திலேயே முதன் எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை தமிழ்நாடு முழுவதும் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த மையங்கள் வருகையாளர்களுக்கு நிகழ் நேர அனுபவத்தைச் சுற்றுலா, கல்வி, தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழங்கும். மேலும் தற்போதுள்ள அதி நவீன 4.0 தொழில்நுட்பங்கள் மூலம் வாழ்க்கையில் புதுமையைப் புகுத்துவதிலும் முக்கிய அங்கம் வகிக்கும்’ என்றார்.
தயாரிப்பு, வாகன ஒருங்கிணைப்பு, பெரு வணிகங்கள், ஐடிஇஎஸ் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மையமாகச் சென்னை திகழ்கிறது. 4பாயிண்ட்2 தொழில்நுட்பங்களைப் உபயோகப்படுத்தி இந்நிறுவனங்கள் பெருமளவு பயனடையலாம். ஏஆர் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திப் பலன்களைப் பரவலாக்க 4பாயிண்ட்2 நிறுவனம் தமிழகத்திலுள்ள தொழில்முனைவோரைத் தனது சேனல் கூட்டாளிகளாகத் தேர்ந்தெடுத்துள்ளது. அவர்களுள் ஹேமந்த் குமார், செந்தில்நாதன், மகாவீர் சந்த், டென்ஜில், டி ரோஸ், சுதீர், வித்யா, அருண், ராஜேஷ் சோலங்கி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
வாடிக்கையாளர்களை ஈர்க்க நிறுவனங்கள் புதுமையான வழிகளை மேற்கொள்ளும் நிலையில், ஆகுமெண்டெட் ரியாலிடி அடிப்படையிலான தீர்வுகள் மற்றும் சேவைகள் உலகெங்கும் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆகுமெண்டெட் ரியாலிடி (ஏஆர்) மற்றும் வெர்சுவல் ரியாலிடி (விஆர்) ஆகியவற்றின் மீதான உலகளாவிய முதலீடு நடப்பு ஆண்டு 12 பில்லியன் டாலர்களிலிருந்து 2024இல் 72.8 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க உள்ளது. இதன் காரணமாக 2022இல் சுமார் 800 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களில் ஏஆர் ஆதரவு பெற்ற வன்பொருள் பொருத்தப்படும். 2025இல் உலக மக்கள் தொகையில் 75%, அதாவது சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் 100%, அடிக்கடி ஏஆர் பயன்படுத்துவோராக இருப்பார்கள். ஏஆர் அனுபவங்களுடன் பொருள்களை விற்கும் வணிகங்கள் தங்களது பிராண்ட்களுக்கு 94% கூடுதல் மாற்று விகிதத்தைப் பெறும்.
4பாயிண்ட்2 ஃப்ளாக்ஷிப் பொருள் – எக்ஸ்பீரியன்ஷியல் மார்க்கெட்டிங்க் சொல்யூஷன்ஸ் & சேவைகள் கருவி – 4.0 மூலம் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ஆகுமெண்டெட் ரியாலிடி (ஏஆர்), மிக்ஸட் ரியாலிடி (எம்ஆர்), எக்ஸ்டெண்டெட் ரியாலிடி (ஏக்ஸ்ஆர்) பல்வேறு துறைகளிலுள்ள நூற்றுக் கணக்கான நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
4பாயிண்ட்2 டெக்னாலஜீஸ்
தங்களது வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய, ஊடாடும், அதிவேக உள்ளடக்க அனுபவங்களை உருவாக்கும் ஆற்றலை 4பாயிண்ட்2 டெக்னாலஜீஸ் வழங்கும். கைபேசி திரைகளிலுள்ள இடைமுகங்களில் முழுமையான புது கோணத்தில் பொருள்களைப் பார்க்க வாடிக்கையாளர்களுக்கு 4பாயிண்ட்2 உதவும். புதுமை, சேவை, ஆலோசனை ஆகியவற்றில் முன்னிலை வகிக்கும் நிறுவனம் கடந்த 80+ ஆண்டுகளாக ஒட்டுமொத்தக் கூட்டுத் தலைமை அனுபவத்தில் சிறந்து விளங்குகிறது. வாடிக்கையாளர்களுக்குத் தேவையான செயலிகள் உருவாக்கம், கஸ்டம் பப்ளிஷிங்க், டிஜிடல் ஸ்பேஸ் ஆகியவற்றில் 2010முதல் 4பாயிண்ட்2 டெக்னாலஜீஸ் நவீன தொழில்நுட்பக் கண்டுபிடிப்பாளராக விளங்கி வருகிறது. https://4point2tech.com/
மேலும் விவரங்களுக்கு…
கே சிவக்குமார்,
மேலாண் இயக்குனர் & நிறுவனர், 4பாயிண்ட்2 டெக்னாலஜீஸ், கைபேசி 9148988344