March 29, 2024
  • March 29, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • நெல்லூர் கொரோனா ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் – இன்றைய முக்கிய செய்திகள்
May 31, 2021

நெல்லூர் கொரோனா ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் – இன்றைய முக்கிய செய்திகள்

By 0 624 Views

*தமிழகத்தில் முழுமுடக்க காலத்தில் குழந்தைத் திருமணங்கள் 40% வரை அதிகரிப்பு.

*கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2000த்தை பெறாதவர்கள் ஜூனில் வாங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.

*கொரோனா மரணங்கள்: ஈஷா பராமரிக்கும் 18 மயானங்களில் 3 மாதங்களுக்கு இலவச தகனம்.

*கர்நாடகாவில் இதுவரை 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூருவில் மட்டும் 500க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு.

*தஞ்சாவூரில் சாலையில் செல்வோரை கத்தியை காட்டி மிரட்டி வீடியோ பதிவு செய்து, இணையத்தில் வைரலாக்கிய 4 பேர் கைது.

*தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் 478 பேர் பலி…ஒரே நாளில் 27,936 பேருக்கு கொரோனா.

*தமிழகத்தில் ஜூன் 3 முதல் 5 வரை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்.

*தமிழகத்தில் பராமரிப்பு பணிகளுக்கான மின்சார வெட்டு நேரம் குறைப்பு.

*நெல்லூர் அருகே கிருஷ்ணப்பட்டினம் பகுதியில் வழங்கப்பட்ட ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல்.

*குழந்தை திருமணத்தை நடத்துவோர், ஊக்குவிப்போர், கலந்து கொள்வோர் மீது கடும் நடவடிக்கை.. கொரோனா காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடப்பதால் அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை.

*விமான விபத்தில் டார்சான் திரைப்பட நடிகர் ஜோ லாரா, அவரது மனைவி உயிரிழப்பு.

*லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரஃபுல் கோடா படேலை நீக்க வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் பினராயி விஜயன்.

*புதிய நாடாளுமன்றம் கட்டிட பணிகளுக்கு தடைவிதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு.

*மகாராஷ்டிராவில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு – உத்தவ் தாக்கரே அறிவிப்பு.

*கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல: பிரிட்டன், நார்வே விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு.

*ஆந்திர மாநிலத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – ஜெகன் மோகன் ரெட்டி.

*பீகார் மாநிலத்தில் முழுஊரடங்கு ஜூன் 8ஆம் தேதி வரை நீட்டிப்பு; கொரோனா குறைவால் தளர்வுகள் அறிவிப்பு.

*இறந்தவர்களின் விவரங்களை மருத்துவமனைகள் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கு என மநீம தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு.

*ஆசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கணை பூஜாராணி.

*சிபிஎஸ்இ +2 தேர்வு குறித்து 2 நாளில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.

*கோயில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை – தமிழக அறநிலையத்துறை அறிவிப்பு.

*18+ அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி: உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு உறுதி.