October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இணையத்தில் 2 பாய்ண்ட் ஓ – ரசிகர்களிடம் லைக்கா வேண்டுகோள்
November 29, 2018

இணையத்தில் 2 பாய்ண்ட் ஓ – ரசிகர்களிடம் லைக்கா வேண்டுகோள்

By 0 1082 Views

சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து இயக்குநர் ஷங்கர் இயக்கி உள்ள 2.0 திரைப்படம் வியாழக்கிழமை (நவ.29) வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை சட்ட விரோதமாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 12,567 இணைய தளங்களில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜயன் சுப்பிரமணியன், புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிடக் கூடாது என நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள், அந்த உத்தரவுகளுக்கு சவால் விட்டு புதிய படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வருகிறது. எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து, 2.0 திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 12,567 இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து நீதிபதி எம்.சுந்தர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் 2.0 படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதைக் கண்ட ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இதையடுத்து இந்த முறைகேடான வெளியீட்டைத் தடை செய்யவேண்டும், தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

4 வருடம் மற்றும் 1000 தொழில்நுட்பக்கலைஞர்களின் உழைப்பு இது. நீங்கள் திரையரங்கில் பார்த்து ரசிக்கவேண்டும் என்பதற்காகத்தான் அனைவரும் உழைத்துள்ளார்கள். எனவே, சட்டவிரோதமாக 2.0 படத்தை இணையத்தளங்களில் பார்க்கவேண்டாம். இணையத்தளங்களில் 2.0 படத்தை யாராவது வெளியிட்டால் அதுகுறித்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் என்று லைகா நிறுவனமும் அறிவித்துள்ளது.