November 25, 2024
  • November 25, 2024
Breaking News
September 8, 2020

கொரோனா பரிசோதனைக்கு தமிழகம் முழுவதும் 2000 கிளினிக் – முதல்வர் அறிவிப்பு

By 0 762 Views

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஆலோசனை முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதிலிருந்து…

கொரோனா படிப்படியாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.  தமிழகத்தின்் பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது.

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இந்த மினி கிளினிக்கில்  மருத்துவர்கள், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் இடம் பெறுவர். ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகளில் மினி கிளினிக்  அமைக்கப்படும்.

40 சதவீத மக்கள் முக கவசம் அணிவது  இல்லை. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

காசிமேடு துறைமுகத்தில் தனி மனித இடைவெளி பின்பற்றப்படுவதில்லை, முக கவசம் அணிவதில்லை.ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி வாங்க கூட்டமாக குவிகின்றனர்; அப்போது ஞாயிறுதோறும் இறைச்சி வாங்க குவியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் குவிவதை காவல் துறையினர் தடுக்க வேண்டும்.

வ்்