தமிழகத்தில் இன்று 5,596 பேர் கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தமிழகத்தில் மேலும் 5,622 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
தமிழக அமைச்சர்கள் அனைவரும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் சென்னையில் கட்டாயமாக இருக்க வேண்டும் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் இன்று கொரோனாவால்
65 பேர் உயிரிழப்பு.
உபி : ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை.
ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம்.முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் – பிரியங்கா காந்தி.
ஓபிஎஸ் – இபிஎஸ் பிரச்சனை தீரவில்லை என்றால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது – இல.கணேசன் பாஜக.
ஓபிஎஸ் உடன் அரசியல் தொடர்பாக ஆலோசிக்கவில்லை.உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் சிலை திறப்பு தொடர்பாக அவருடன் ஆலோசித்தேன் – அமைச்சர் ஆர்பி.உதயகுமார்.
கூட்டணி கட்சியினரை ஒருமையில் அழைத்ததாக சர்ச்சை – வருத்தம் தெரிவித்து திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் அறிக்கை.
கூட்டணி தொடர்பாக யாரையும் ஒருமையில் பேசவில்லை.மாஸ்க் அணிந்து பேசியதால் சில வார்த்தைகள் தவறுதலாக வந்திருக்கலாம் – திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்.
எல்லோரிடத்திலும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு; இனி இப்படி நிகழாவண்ணம் நடந்து கொள்வேன் – திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்.
திமுக தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக ராஜகண்ணப்பன் நியமனம் – திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்.
திமுக மீனவர் அணி செயலாளராக பத்மநாபன், தலைமைக் கழக செய்தி தொடர்பு செயலாளராக பிடி.அரசகுமார் நியமனம் – திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்.
திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு துணைச் செயலாளராக அடையாறு ஷபீல், மீனவர் அணி துணைச் செயலாளராக சி.புளோரன்ஸ் நியமனம் – திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்.
எஸ்கே.வேதரத்தினம், என்.சிவக்குமார் ஆகியோர் திமுக விவசாய அணி துணைச் செயலாளராகவும் , எ.வ.வே.கம்பன் திமுக மருத்துவ அணி துணைத்தலைவராக நியமனம் – திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்.
நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலை அல்ல தற்கொலை தான் – எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தா.
திருப்பதி செல்லும் பக்தர்கள் நடைபயணமாக செல்ல வேண்டாம்.. ₹300 டிக்கெட் உள்ளவர்கள் மட்டும் வாருங்கள் – அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி வேண்டுகோள்.
அந்தமான் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை – வானிலை மையம்.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம்.