ஒரு பயணத்தில் சென்று சேர வேண்டிய தூரம் தாமதப்படுவதற்கு வழியில் பல தடைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தடைகள் எல்லாம் ஒரு பயணத்துக்கு எப்படி உதவியது என்கிற வித்தியாசமான கதைக்களத்தை இந்த படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் அர்ஜுன்.
செல்வந்தர் சத்யராஜ் தாயின்றி வளர்ந்த தன் மகள் ஐஸ்வர்யாவை ஒரு தாய் போலவே பாசத்துடன் வளர்த்து வருகிறார். ஐஸ்வர்யாவும் அவரை டாடி என்று அழைப்பதற்கு பதிலாக அம்மா என்று அழைத்து வருகிறார்.
இந்நிலையில் மதுரையில் நடைபெறும் ஒரு சமையல் கலை நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக அதில் பட்டம் பெற்ற ஐஸ்வர்யா காரில் செல்கிறார். சத்யராஜும் மகளிர் பெரிய மனமில்லாமல் பிரியாவிடை கொடுக்கிறார்.
வழியில் நாயகன் நிரஞ்சன் சுசீந்திரா ஐஸ்வர்யாவிடம் காரில் லிஃப்ட் கேட்டுக்கொள்கிறார். அதேபோல் மதுரை செல்லும் வழியில் ஒரு பழம் இருக்கும் சிறுமி மாடு மேய்க்கும் சிறுவன் தாதா அர்ஜுன் போன்றவர்களால் பயணத்துக்கு நிறைய இடையூறு ஏற்படுகிறது.
கடைசியில் அவர் சென்று சேர்ந்த நிகழ்ச்சிக்கு சற்றே தாமதமாக செல்ல நேர அன்னையாரத்தில் அங்கே ஒரு வெடி விபத்து ஏற்பட்டு அனைவரும் இறந்து போகின்றனர்.
தாமதமே தன் உயிரை காப்பாற்றியது என்று புரிந்து கொள்ளும் ஐஸ்வர்யா தன் உயிரை காப்பாற்றிய அந்த தாமதத்திற்கு காரணமானவர்களை நன்றி கூற தேடிச் செல்வதும் அந்தப் பயண அனுபவமும்தான் இந்த படம்.
நிரஞ்சன் சுதீந்திரா, ,அர்ஜுன் ,ஐஸ்வர்யா அர்ஜுன், பிரகாஷ்ராஜ், , சத்யராஜ், துருவா சார்ஜா,சுமித்ரா,பிதிரிசாதி நடித்துள்ளனர். அர்ஜுன் திரைக்கதை அமைத்து இயக்கித் தயாரித்துள்ளார். அனுப்ரூபன்ஸ் இசையமைத்துள்ளார் .
ஜி பாலமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அயூப்கான் படத்தொகுப்பு செய்துள்ளார்.