விஜய் சேதுபதியும், சூரியும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகின்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு கிளப்பில் ராஷி கண்ணாவை விஜய் சேதுபதி சந்திக்கின்றார்.
அங்கு அவருடன் சிறிய மோதல், அதை தொடர்ந்து ராஷி கண்ணாவை விஜய் சேதுபதி ஏரியாவை புகைப்படம் எடுக்க ப்ராஜக்ட் கொடுக்கின்றனர். அப்போது இருவருக்கும் காதல் வருகிறது.
ஆனால் ராஷி கண்ணா அப்பா மிகப்பெரும் தொழிலதிபர், அவர் விஜய் சேதுபதியை பார்த்ததும் இவன் பெயர் முருகன் இல்லை, தமிழ் என டுவிஸ்ட் கொடுக்க, அதன் பிறகு தமிழ் யார், எதற்காக ராஷி கண்ணா அப்பா அஞ்சுகிறார் என்பதே மீதிக்கதை.