September 12, 2025
  • September 12, 2025
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • தமிழ்நாட்டின் பல்லுயிர் தன்மையை கொண்டாடும் ‘வன தமிழ் நாடு’ ஆவணப்படம் வெளியீடு..!
September 12, 2025

தமிழ்நாட்டின் பல்லுயிர் தன்மையை கொண்டாடும் ‘வன தமிழ் நாடு’ ஆவணப்படம் வெளியீடு..!

By 0 13 Views

• இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டின் இயற்கை வளத்தை உலக அளவில் பெரிய திரைகளில் அதன் பன்னாட்டு விழாவில் காட்சிப்படுத்த இருக்கிறது.

• இந்த ஆவணப்படம் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வெளியிடப்பட இருக்கிறது. மேலும் இந்திய மெட்ரோ நகரங்களில் திரையிடப்படுகிறது.

சென்னை, செப்டம்பர் 12, 2025:

தமிழ் நாடு வனத்துறை (Tamil Nadu forest department) இன்று “வன தமிழ் நாடு” (“Wild Tamil Nadu”) என்ற ஆவணப் படத்தின் (Documentary) முன்னோட்டத்தை (Trailer) வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் வனவிலங்கு பாதுகாப்பையும், கண்களை கொள்ளை கொள்ளும் இயற்கை பேரழகையும் படம் பிடித்து காட்டும் விதத்தில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சுந்தரம் ஃபாஸனர்ஸ் (Sundram Fasteners) நிறுவனத்தின் சிஎஸ்ஆர் (CSR) பங்களிப்பின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவண படத்தை நேச்சர் இன்ஃபோகஸ் (Nature inFocus)-ன் திரு. கல்யாண் வர்மா இயக்கி இருக்கிறார். தமிழக வனத்துறையின் ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டின் பெருமையையும், இயற்கையை பாதுகாக்கும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.

பனி மேகங்கள் தவழும் மலைத்தொடர்கள், பள்ளத்தாக்குகளில் பாய்ந்து ஓடும் அருவிகள், ஆட்கள் உள் நுழையாத அடர் காடுகள், யானைகள் கூட்டம் சேரும் ஆற்றங்கரைகள், சிறுத்தைகள் அமைதியாக நடக்கும் முகடுகள் என்று தமிழ்நாட்டின் அழகை நாம் இந்த ஆவணப் படத்தில் பார்த்து ரசிக்கலாம்.

ஈர நிலத்தில் சூரிய ஒளி மெதுவாக தோன்றும் போது செந்நாரை கூட்டம் தமது இளம் சிவப்பு சிறகுகளை சிலுப்பி வானத்தில் பறக்கும் பரவச காட்சியை பார்க்கிறோம். எங்கும் பறக்கும் மின்மினி பூச்சிகள் பார்ப்பதற்கு பிரகாசிக்கும் நட்சத்திர கூட்டம் போன்று தெரிகிறது.

“வன தமிழ்நாடு” ஆவணப் படத்தில் தோன்றும் ஒரு சில காட்சிகள் மட்டுமே இவை.

இந்த ஆவணப்படம் முதலில் சென்னையில் காட்சிப்படுத்தப்பட்டு பிறகு அனைத்து முக்கிய நகரங்களிலும் வெளியிடப்பட இருக்கிறது. தொடர்ந்து சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்த ஆவணப்படம் திரையிடப்பட இருக்கிறது.

இந்த ஆவண படத்தை இயக்கியிருக்கும் கல்யாண் வர்மா, சர்வதேச எம்மிஸ் (Emmys) விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட

சிறந்த இயக்குனர் ஆவார். ஒரு மணி நேரம் வரை ஓடும் இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டின் மலைகள், காடுகள், சமவெளிகள், கடற்கரைகள், பவளப்பாறைகள் என்று உலகில் வனப்புமிக்க இயற்கை வளங்களை நம் கண்முன் கொண்டு வருகிறது.

இந்த ஆவணப்படத்திற்கு மூன்று முறை கிராமிய விருது (Grammy Award) பெற்ற ரிக்கி கேஜ் (Ricky Kej) இசை அமைத்துள்ளார். கர்நாடக இசை மூலம் இயற்கை அழகை நம் காதுகளில் நர்த்தனம் ஆட செய்துள்ளார். இந்த ஆவணப்படத்திற்கு தனது குரல் மூலம் பிரபல நடிகர் திரு அரவிந்த்சாமி சிறப்பு சேர்த்துள்ளார்.

‘’சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்திற்கு நிலையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது. “வன தமிழ்நாடு” ஆவண படமானது தமிழ்நாட்டின் காடுகள், வன விலங்குகள், அதன் நீண்ட பாரம்பரியம் கொண்ட கலாச்சாரம் ஆகியவற்றை பற்றிய வலிமையான பயணமாக இருக்கும். இன்றைய இயற்கையை பாதுகாத்து அதை நமது அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்ற பொறுப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தும் விதத்தில் இந்த ஆவணப்படம் இருக்கும் என்று சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் Ms ஆரத்தி கிருஷ்ணா (Ms Arathi Krishna) தெரிவித்துள்ளார்.

‘’இந்த ஆவணப் படமானது தமிழகத்தின் உயர் பாரம்பரியத்தை மட்டும் அல்லாமல் நமது மாநிலத்தின் சூழலியல் தொடர்புகள் மற்றும் நம் மக்களின் பாரம்பரியத்தில் முக்கிய புள்ளிகளை இணைக்கிறது” என்று தமிழ்நாட்டு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வனத்துறையின் (சூழல், காலநிலை) தலைவர் Ms சுப்ரியா சாகு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணப்படம் நம் மக்களின் பெருமையை பறை சாற்றவும், அபூர்வமான பல்லுயிர்கள் மற்றும் சுற்றுச்சூழலை நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதற்கு ஊக்கம் அளிக்கவும் உதவும் என்று மேலும் அவர் தனது கருத்தை தெரிவித்தார்.

இந்த ஆவணப்படம் பற்றி கருத்து தெரிவித்துள்ள அதன் இயக்குனர் கல்யாண் வர்மா இந்த ஆவணப்படம் அவரது இயக்குனர் பணியில் மிகவும் உன்னதமான விஷயமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பாரம்பரியம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று இரண்டறக் கலந்துள்ளது. இங்கு தான் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வருகின்றன. இந்த ஆவணப்படம் அது பற்றிய கதைகளை நமக்கு காட்சிப் படுத்துவதாக இருக்கும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற மாறாத கொள்கை கொண்ட தமிழ்நாட்டு மக்களின் வனவிலங்கு பாதுகாப்பு பற்றிய அக்கறையை காட்டுவதாகவும் இருக்கும் என்று கல்யாண் வர்மா தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணப்படம் முதலில் சென்னை நகரத்தில் திரையிடப்படும். அதைத் தொடர்ந்து முக்கிய நகரங்களிலும் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

For further information, please contact:

Mr. T E Narasimhan,

Adfactors PR

Email: te.narasimhan@adfactorspr.com

Phone: +91-98417-34134