October 24, 2025
  • October 24, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ‘வைல்ட் தமிழ்நாடு’ – தமிழ்நாட்டின் பல்லுயிர் சூழலைக் கொண்டாடும் ஒரு முக்கிய ஆவணப்படம்
October 22, 2025

‘வைல்ட் தமிழ்நாடு’ – தமிழ்நாட்டின் பல்லுயிர் சூழலைக் கொண்டாடும் ஒரு முக்கிய ஆவணப்படம்

By 0 17 Views

சென்னை, 16 அக்டோபர் 2025: சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் [Sundram Fasteners Ltd] நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘வைல்ட் தமிழ்நாடு ‘ எனும் ஆவணப்படம் [‘Wild Tamil Nadu’], அக்டோபர் 16, 2025 அன்று சென்னையிலுள்ள பி.வி.ஆர் சத்யம் திரையரங்கில் முதன்முறையாக திரையிடப்பட்டது.

திரு. கல்யாண் வர்மா இயக்கத்தில், நேச்சர் இன் ஃபோகஸ் [Nature inFocus] மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் [Tamil Nadu Forest Department] ஆதரவுடன் இந்த முற்போக்கான வனவிலங்கு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஆச்சர்யமூட்டும் சுற்றுச்சூழல் செழுமையை இந்த ஆவணப்படம் அழகியலுடன் வெளிப்படுத்துகிறது. மேலும் இந்தப் படத்தைக் கண்டுகளிக்கும் மக்களிடையே, தமிழ்நாட்டின் வன மகத்துவத்தை உணரச் செய்வதோடு, நம்முடைய வனப்பகுதிகளையும், வன விலங்குகளையும் பாதுகாப்பதில் நமக்குள்ள அக்கறையை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

’வைல்ட் தமிழ்நாடு’ [Wild Tamil Nadu], தமிழ்நாட்டின் ஆச்சர்யப்பட வைக்கும் பல்லுயிர் சூழலை காட்சிப்படுத்தும் புத்தம் புதிய இயற்கை வரலாற்று ஆவணப்படமாகும். தமிழ்நாட்டிலுள்ள மழைக்காடுகள், பவளப்பாறைகள் மற்றும் வறண்ட பாலைவனங்கள் ஒன்றிணைந்து, பூமியின் தனித்துவமிக்க சுற்றுச்சூழலைக் கொண்டிருக்கும் ஒரு அற்புதமான நிலப்பரப்பை உருவாக்கியுள்ளன. இந்த ஆவணப்படத்தைப் பார்க்கும் போது, பார்வையாளர்கள் தமிழ்நாட்டின் அற்புதமான நிலப்பரப்புகளில் பயணிப்பது போன்ற உணர்வை அளிக்கிறது. நாம் இதுவரை பார்த்திராத பல வனவிலங்குகளை நேரில் சந்திப்பது போன்ற அனுபவத்தையும் இப்படம் அளிக்கிறது. கேமராக்களினால் இதுவரை படம்பிடிக்கப்படாத வன விலங்குகளின் கம்பீரமான, குறும்புத்தனமான பழக்கவழக்கங்களையும் நாம் இப்படம் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது.

பண்டைய சங்க இலக்கியங்களினால் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய ஐந்திணை நிலங்களான குறிஞ்சி (மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகள்), முல்லை (காடு மற்றும் காடு சார்ந்த பகுதிகள்), மருதம் (வயல் மற்றும் வயல் சார்ந்த பகுதிகள்), நெய்தல் (கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகள்) மற்றும் பாலை (வறண்ட மணற்பரப்பு மற்றும் அது சார்ந்த பகுதிகள்) வழியாக வன தமிழ்நாடு ஆவணப்படம் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இஃது 4,500 ஆண்டுகளுக்கு முன்பு ஐந்திணை நிலங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட சங்க இல்லக்கியங்களில் தமிழ்நாட்டின் செழுமையான இயற்கை சுற்றுச்சுழல் வளத்தை எடுத்துரைக்கும் விதமாக காலம் கடந்தும் எதிரொலித்து கொண்டிருக்கின்றன.

இந்த ஆவணப்படம், மலைக்க வைக்குமளவிற்கு பெரியதாக இருக்கும் யானைகள், சீறிப்பாயும் சிறுத்தைகள் முதல் மின்மினிப் பூச்சிகள், சிங்கவால் குரங்குகள் காண்பதற்கரிய மெட்ராஸ் முள்ளம் எலி போன்ற அதிகம் அறிந்திராத பல்லுயிரினங்கள் நிறைந்த வனப்பகுதிகளை கடந்து செல்கிறது. இயற்கை வரலாற்றை காட்டின் வெளிப்படாத கதைகளுடன் பின்னிப்பிணைத்து, இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ்நாட்டின் உயிரியல் பல்வகைமை மற்றும் விலங்குகள், தாவரங்கள் இடையேயான வாழ்வை பற்றிய ஒரு தெளிவான படத்தை இது முன்வைக்கிறது.

சுந்தரம் ஃபாஸ்டெனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆவண திரைப்படத் இயக்குனர் திரு. கல்யாண் வர்மாவால் இயக்கியிருக்கும் இந்த ஆவணப்படம், இயற்கையின் வியத்தகு மாறுபாடுகள் ஒன்றிணையும் ஒரு நிலத்திற்குள், மனிதர்களுக்கும் காட்டிற்கும் இடையேயான பிணைப்பை வழிநடத்திக்கொண்டிருக்கும் பழங்கால கலாச்சார ஞானம் பற்றிய ஒரு மணிநேர திரைப்படப் பயணமாகும். பெரும் அர்ப்பணிப்புடன் செயல்படும் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் குழுவுடன் இணைந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவினர் தமிழ்நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட, பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகளில் காட்சிகளைப் படம்பிடித்திருக்கின்றனர்.

மூன்று முறை கிராமி விருது பெற்ற திரு. ரிக்கி கேஜ் இந்த ஆவணப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த ஆவணப்படத்தின் ஒலிப்பதிவு, கர்நாடக இசை பாரம்பரியத்தை அதற்கான இசைக்கோர்ப்புடன் வடிவமைத்து இருப்பது நாம் காண்கிற நிலபரப்புகளின் ஒலிகளை மனதிற்குள் எதிரொலிக்க வைக்கின்றன.. அதேநேரம், நிலபரப்புகளை விளக்கும் பிரபல நடிகர் திரு. அரவிந்த் சுவாமியின் பின்னணிக்குரல் இக்கதையை உயிர்ப்பிக்க செய்கிறது.

“சுந்தரம் ஃபாஸ்டெனர்ஸ் லிமிடெட்டில், நம்முடைய இயற்கை மரபைக் கொண்டாடும், பாதுகாக்கும் முயற்சிகளுக்கான ஆதரவை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்த ஆவணப்படம் படம்பிடிக்கும் கேமராவின் லென்ஸுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக வெளிவந்திருக்கிறது. இது தமிழ்நாட்டின் வனப்பகுதியின் உன்னதமான இயற்கையையும், மனம் கவரும் சுற்றுச்சூழலையும், மக்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஆழமான பிணைப்பையும் அழகாக படம்பிடித்திருக்கிறது.இன்று முழுப் படத்தையும் வெளியிடும் நிலையில், நமது பூமியை மிகச் சிறந்த கிரகமாக பாதுகாக்க, நமக்குள் இருக்கும் அர்ப்பணிப்பை மீண்டும் உயிர்ப்பிக்க செய்யும் என்று நம்புகிறோம்’’ சுந்தைம் ஃபாஸைர்ஸ் நிறுவைத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி. ஆர்த்தி கிருஷ்ணா கூறினார்.

’இந்த ஆவணப்படம் எனது தொழில்முறை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக மனநிறைவைக் கொடுத்திருக்கிறது” என்று திரு. கல்யாண் வர்மா குறிப்பிட்டார். கலாச்சாரமும் வனப்பகுதியும் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப்பிணைந்த ஒரு நிலத்தின் ஆழமான கதையைப் பகிர்ந்து கொள்வதுதான் என்னுடைய நோக்கம். வியக்க வைக்கும் பன்முகத்தன்மை கொண்ட வாழ்விடங்களை தக்கவைத்திருப்பதில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இந்தக் கதைகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும், பல்லுயிர்களுள்ள வனப்பகுதிகளைப் பாதுகாப்பதில் நம் அனைவருடைய பங்களிப்பையும் உணர்த்தவே இந்த ஆவணப்படம்.” என்று அவர் மேலும் கூறினார்.

“தமிழ்நாட்டின் சிலிர்க்க வைக்கும் இயற்கை அழகை வெளிப்படுத்தும் ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படத்திற்கு இசையமைக்கும் மாபெரும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை பெரும் கெளரவமாக கருதுகிறேன். இயற்கை உலகைக் கொண்டாடும், சமூக நோக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இசையை உருவாக்குவதற்கு என் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் வகையில், இயக்குநர் கல்யாண் வர்மாவுடன் இணைந்து பணியாற்றியது ஒரு இயல்பாக அமைந்துவிட்டது. இந்தப் படத்தில் பணியாற்றியது, அவருடைய அழகிய காட்சிப்படுத்தலில் நானும் பங்களிக்க எனக்கு உதவியதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் வனவிலங்குகள் பற்றி ஆழ்ந்த புரிதலையும் கொடுத்திருக்கிறது. இதனாலேயே தமிழ்நாட்டையும், இங்குள்ள ஆச்சர்யமூட்டும் வனவிலங்குகளையும் குறிக்கும் இசையை வடிவமைக்கும் பொறுப்பு எனக்கிருந்ததை நான் உணர்ந்தேன். இயற்கை எழில் கொஞ்சும் இந்த நிலபரப்புகளை அடையாளப்படுத்தும் வகையில், காலம் கடந்தும் நிலைக்கும் ஒலி அடையாளங்களை உருவாக்க வேண்டுமென்பதே எங்களுடைய நோக்கமாக இருந்தது. இந்த ஆவணப்படத்தில், வசீகரிக்கும் குரல்கள், பின்னணியில் கூடவே ஒலிக்கும் குரல்கள், இசைக்குழுக்கள், கர்நாடக புல்லாங்குழல், வயலின், மோர்சிங், வீணை உள்ளிட்ட இன்னும் பல பாரம்பரிய இசைக்கருவிகளுடன், தமிழ்நாடு மற்றும் அதன் எல்லைக்கு அப்பால் இருந்து பல்வேறு இசைக்கருவிகள் ஒலிப்பதை நீங்கள் கேட்கமுடியும். எந்தவித தடைகளும் இல்லாமல் இசை இயல்பாகவே உருவானது, இந்தப் படத்தின் முக்கியத்துவத்தை உணர செய்திருக்கிறது. இது இப்படத்தின் ஆத்மார்த்தமான உணர்வுடன் எனக்கிருக்கும் நெருங்கிய உறவை பிரதிபலித்திருக்கிறது என்று சொல்லலாம்’’ என்கிறார் ரிக்கி கேஜ்.

இந்த ஆவணப்படம் அக்டோபர் 16, 2025 அன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள பி.வி.ஆர் சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது.

இயக்கம்: திரு. கல்யாண் வர்மா

தயாரிப்பாளர்: திருமதி. ஆர்த்தி கிருஷ்ணா, சுந்தரம் ஃபாஸ்டெனர்ஸ் லிமிடெட்

மூல இசை: திரு. ரிக்கி கேஜ்

காட்சிகளுடன் கதை சொல்பவர்: திரு. அரவிந்த் சுவாமி

இணை இயக்குனர் & ஆசிரியர்: திரு. அகிலேஷ் தாம்பே

நிர்வாக தயாரிப்பாளர்: திரு. ரோஹித் வர்மா

இந்த படம் சுந்தரம் ஃபாஸ்டெனர்ஸ் லிமிடெட்டின் சமூக பொறுப்புணர்வு சார்ந்த செயல்பாடுகளின் ஒரு அங்கமாக, நேச்சர் இன்ஃபோகஸுடன் இணைந்து, தமிழ்நாடு வனத்துறையின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

For further information, please contact:

Mrs Annapoorni K V | Adfactors PR

91 98840 61132

Mr. T E Narasimhan | Adfactors PR

Email: te.narasimhan@adfactorspr.com Phone: +91-9841734134