October 16, 2025
  • October 16, 2025
Breaking News
November 26, 2018

ரஜினி அஜித் போட்டியில் வெல்லப் போவது யார்?

By 0 979 Views

ரஜினிக்கும், அஜித்துக்கும் நேரடியாக எந்தப் பஞ்சாயத்தும் இல்லை. சொல்லப் போனால் அஜித் மீது அதிக பாசமும், அக்கறையும் கொண்டவர் ரஜினி.

ஆனால், அஜித்தின் ‘விஸ்வாசம்’ வெளியாகும் பொங்கல் அன்றே ரஜினியின் ‘பேட்ட’ வெளியாகும் என்ற அறிவிப்பு வர, தொழில் ரீதியான போட்டி தொடங்கிவிட்டது. இந்நிலையில் ரஜினி படம் வெளியாவதால் அஜித் படம் தள்ளிப்போவதாக செய்திகள் பரவ, துவண்டார்கள் அஜித் ரசிகர்கள். 

முக்கியமாக அஜித்தின் விஸ்வாசம் பற்றி அப்டேட் செய்ய ஆளே இல்லாமல் போனதில் அயர்ச்சியடைந்தினர் அஜித் ரசிகர்கள் எனலாம். யாரைக் கேட்பது, எப்படிக் கேட்பது என்று விழிபிதுங்கிநின்ற அவர்களை குஷிப்படுத்த நேற்று திடீரென்று ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள் தயாரிப்பாளர்கள்.

அதில் குறிப்பாக பொங்கலுக்குப் படம் வருமென்பது குறிப்பிடப் பட்டிருந்ததில் உற்சாகமடைந்த அஜித் ரசிகர்கள் அதை இன்று வரை ட்ரெண்டிங்கில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். அத்துடன் அது ரஜினியின் ‘பேட்ட’ மோஷன் போஸ்டரை விட ஒரே இரவில் அதிக லைக்குகள் பெற்றதாகவும்  ‘கெத்து’ காட்டி வருகிறார்கள்.

ஆக, பொங்கலுக்கு வரும் இருவர் படங்களின் போட்டி இப்போதே ஆரம்பித்து விட்டது. ஆனால், இரு படங்களும் வெற்றி பெற வேண்டும் என்பதே சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் ஆரோக்கியமான விஷயம்.

கீழே ட்ரெண்டிங் படைத்த விஸ்வாசம் மோஷன் போஸ்டர்…