January 24, 2026
  • January 24, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஷ்ணு விஷால் ஜ்வாலா கட்டா திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது
April 22, 2021

விஷ்ணு விஷால் ஜ்வாலா கட்டா திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது

By 0 588 Views

தமிழில் இளம் தலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். கட்டான தோற்றமும் நல்ல நடிப்பு திறமையும் கொண்ட இவர் நடிப்பில் ராட்சசன் மிகப்பெரிய வெற்றியடைந்தது. கடைசியாக இவர் நடித்து வெளியான படம் ‘ காடன்’.

முன்பே திருமணமான விஷ்ணுவிஷால் கருத்து வேற்றுமை காரணமாக முதல் மனைவியை பிரிந்து தனித்து வசித்து வந்தார். இந்நிலையில் பிரபல பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் அவருக்கு காதல் அரும்பியது.

சமீபத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது விரைவில் ஜுவாலா கட்டாவை மணமுடிப்பேன் என்று கூறியிருந்தார். சில தினங்களுக்கு முன் அவரது திருமண அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வெளியானது.

இன்று வியாழக்கிழமை (22-04-2022) தன் காதலி ஜுவாலா கட்டாவை முறைப்படி மணமுடித்தார் விஷ்ணு விஷால். இந்தத் திருமணம் ஐதராபாத்தில் இன்று கொரோனாாபாதுகாப்பு  வழி முறையுடன் முக்கிய விருந்தினர்கள் மட்டும் பங்கேற்க இனிதே நடந்து முடிந்தது.

மணமக்கள் வாழ்க..!