July 1, 2025
  • July 1, 2025
Breaking News
January 12, 2020

பூரண உடல்நலம் பெற்று மீண்டும் வருவேன் – விஜயகாந்த்

By 0 759 Views
கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அப்போது பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள்  வழங்கப்பட்டன. 
 
அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்…
“எனக்காக பிரார்த்தனை செய்யும் தொண்டர்கள்தான் எனது முதல் கடவுள். விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டும் வருவேன். தேமுதிக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்..!” என்றார்.
 
தொடர்ந்து  விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘நமது நாடு இந்து நாடாக இருந்தாலும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். அவர்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் தீவிரவாத செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது.
 
ஊரக உள்லாட்சித் தேர்தலில் நமது கட்சி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் தமிழக அரசியலில் தேமுதிகவின் ஆட்டம் ஆரம்பித்திருக்கிறது.
 
அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக அதிக இடங்களை கைப்பற்ற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்..!’ என்று கேட்டுக்கொண்டார்.