June 22, 2026
  • June 22, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய் சேதுபதியால் முத்தையா முரளிதரனுக்கு பெருமையா?
July 25, 2019

விஜய் சேதுபதியால் முத்தையா முரளிதரனுக்கு பெருமையா?

By 0 793 Views

இலங்கையைச் சேர்ந்த உலகப்புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை டார் மோஷன் பிக்சர்ஸ் படமாகத் தயாரிக்கிறார்கள். 

இதில் முரளிதரன் வேடத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி. எம்.எஸ் ஸ்ரீபதி இப்படத்தை எழுதி இயக்க உள்ளார். தமிழில் உருவாகும் இந்தப்படம், உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட இருக்கிறது.

இந்தப்படம் பற்றி முத்தையா முரளிதரன் கூறும்போது…

“எனது வாழ்வின் கதையைப் படமாகத் தயாரிக்கும் தார் மோஷன் பிக்சர்ஸ் உடன் சேர்ந்து பணியாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தை 2020 ஆம் ஆண்டின் கடைசியில் வெளியிட நாங்கள் எண்ணி இருக்கிறோம்.

விஜய் சேதுபதி போன்ற ஒரு சிறந்த கலைஞர் என்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கப் போவதை நான் பெரும் கௌரவமாக கருதுகிறேன்..!” என்று சொன்னதாக செய்திகள் வருகின்றன.

Muttiah Muralitharan

Muttiah Muralitharan

பதிலுக்கு விஜய் சேதுபதியும் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிப்பது பற்றிய மகிழ்ச்சியையும், பெருமையையும் தெரிவித்திருக்கிறார் என்பது ஒருபுறமிருக்க, படம் சம்பந்தப்பட்டவர்கள் விஜய் சேதுபதி பற்றி முரளிதரன் பெருமைப்பட்டதை மட்டும் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். 

சினிமாவைப் பொறுத்தவரையில் விஜய் சேதுபதி சிறந்த நடிகர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், முரளிதரன் போன்ற உலகளாவிய விளையாட்டு வீரரின் சாதனைக்கு முன்னால் அது சிறியதுதான்.

யாரின் பெருமையை யார் சொல்வது என்பதை உணர்ந்து சொன்னால் நல்லது..!