July 13, 2025
  • July 13, 2025
Breaking News
July 25, 2019

400 + திரையரங்குகளில் சந்தானத்தின் A1

By 0 787 Views
‘தில்லுக்கு துட்டு 2’ படத்தைத் தொடர்ந்து சந்தானத்தின் நடிப்பில் வெளியாக 
இருக்கும் படம் ‘A1′. அக்கியூஸ்ட் 1 என்பதன் சுருக்கமான இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜான்சன் 
இயக்க, அறிமுக தயாரிப்பாளர் எஸ்.ரான் நாராயணன் சர்க்கிள் பாக்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.
 
இப்படத்தில் எப்போதும் போல சந்தானத்தின் காமெடி சரவெடியாக வெடித்தாலும், இதுவரை சந்தானம் 
ஹீரோவாக நடித்த படங்களில் இது சற்று வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம் என்பதோடு, 
இப்படத்தின் மூலம் முதல் முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சந்தானம் படத்திற்கு 
இசையமைத்திருக்கிறார்.
 
சந்தானம் படம் என்றாலே, லாபம் என்பதால் ‘A1′ படத்தை 
திரையிட தமிழகத்தில் உள்ள ஏராளமான திரையரங்கங்கள் ஆர்வத்தோடு ரிலீஸ் செய்கிறார்கள். 
 
அந்த வகையில், இன்று (ஜூலை 26) தமிழகம் முழுவதும் சுமார் 400 க்கும் மேற்பட்ட திரையரங்கங்களில் 
‘A1’ வெளியாகியிருக்கிறது.
 
இப்படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.பி.சவுத்ரி தமிழகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான 
முறையில் வெளியிட்டிருக்கிறார்.