விஜய் சேதுபதி போல் ஒரு நடிகர் கிடைத்தது தமிழ் ரசிகர்கள் செய்த புண்ணியம் என்றுதான் சொல்ல வேண்டும். நடிப்புதான் முக்கியம், நட்சத்திர அந்தஸ்து முக்கியமில்லை என்று உணர்ந்தும், நடந்தும் வருபவர்.
செல்வாக்குள்ள ஹீரோவாக வளர்ந்தும், பல படங்களில் ஹீரோவாக நடித்தும் வரும் வேளையிலேயே ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவனுக்கு வில்லனாகி அசத்தினார்.
Vijay Sethupathi on Board in Vijay 64
இப்போது விஜய்யின் முறை. லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘விஜய் 64’ படத்தில் விஜய்க்கு வில்லனாக இருப்பவர் விஜய் சேதுபதியேதான். விஜய் 64 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் செய்தி சில தினங்களாகவே வலை தளங்களில் வளைய வருகிறது.
ஆனால், இன்றுதான் அதிகாரபூர்வமாக அதை அறிவித்தார்கள். ஆனால், அதில் அவர் விஜய்க்கு வில்லனாவது பற்றிய அறிவிப்பு இல்லை. இருந்தாலும் நாம் விசாரித்தவரையில் அவர் விஜய்க்கு வில்லனாகவேதான் நடிப்பதாகத் தெரிகிறது.
நடிப்பிலும் அவர் விஜய்க்கு வில்லனாக இருப்பார் என்பது நிச்சயம்..!