April 18, 2025
  • April 18, 2025
Breaking News
October 7, 2018

விஜய்யுடன் மோதும் விஜய் ஆன்டனி..!

By 0 1186 Views

இந்த வருட ஆரம்பத்தில் தீபாவளிக்கு வரும் படங்களாக விஜய், அஜித், சூர்யா படங்கள் கருதப்பட்டாலும் தயாரிப்பு அடிப்படையில் அஜித்தும் சூர்யாவும் பின் தங்க விஜய்யின் ‘சர்கார்’ மட்டுமே வெளியாவதாக அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டது.

அதற்கு முதல் காரணம் தயாரிபாளர்களான சன் பிக்சர்ஸ். திட்டமிடுவதில் கெட்டிக்காரர்களான அவர்கள் வெளியிடும் தேதியை முடிவு செய்தே படத்தை முடித்து வெளியீட்டுக்குத் தயாராக்கி விட்டார்கள். அவர்களின் திட்டமிடுதலுக்கேற்ப ஏ.ஆர்.முருகதாஸும் படத்தை முடித்துக் கொடுத்து விட்டார்.

Thimiru Pudichavan

Thimiru Pudichavan

‘சர்கார்’ மகா பெரிய படமாக இருப்பதால் மற்ற படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைப்பது கடினம் என்ற நிலையில் பிற படங்கள் அந்தப் போட்டியில் இல்லாமல் இருந்தது. இந்தியில் பிரமாண்டமாகத் தயாராகும் ‘ஹக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்’ படம் மட்டுமே இப்போதைக்கு தீபாவளிக்கு இந்திய அளவில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அதை விஜய் படத்துக்கான போட்டிப் படமாகக் கருதமுடியாது.

இந்நிலையில் தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் நேற்று விஜய் ஆண்டனி நடிக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படமும் தீபாவளி வெளியீடாக அறிவிக்கப்பட்டிருப்பது எல்லா மட்டங்களிலும் ஆச்சர்யத்தைக் கிளப்பியிருக்கிறது.

விஜய் + சன் பிக்சர்ஸ் + ஏ.ஆர்.முருகதாஸ் + ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற கூட்டணியின் பலம் பற்றித் தெரியாதவரல்ல விஜய் ஆண்டனி. விஜய்க்கு அவர் நெருக்கமானவரும் கூட என்றிருக்க, விஜய் ஆண்டனியின் இந்தக் களமிறங்கல் சகலரது புருவத்தையும் உயர வைத்திருக்கிறது.

என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம்..!