October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இந்தியாவின் 1500 திரை அரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் விஷாலின் வீரமே வாகை சூடும்
February 2, 2022

இந்தியாவின் 1500 திரை அரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் விஷாலின் வீரமே வாகை சூடும்

By 0 474 Views

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில், நடிகர் விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கியுள்ள “வீரமே வாகை சூடும்” படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில், பிரமாண்ட வெளியீடாக 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது.

அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டத்தைக் களமாக கொண்டு உருவாகியுள்ளது இப்படம். நீண்ட இடைவேளைக்கு இப்படத்தில் பாண்டியநாடு பட பாணியில் மாறுபட்ட நடிப்பில் மிரட்டியிருக்கிறாராம் நடிகர் விஷால். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி அறிமுக நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,
மஹா காந்தி, மரியம் ஜார்ஜ்
Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்ய பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார்.

இப்படம் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. வரும் 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி தமிழ் நாட்டில் 560க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும், ஆந்திராவில் 750க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும், கன்னடத்தில் மிக பெரிய வளியீட்டாக 180 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் பிரமாண்ட வெளியீடாக உலகமெங்கும் வெளியாகிறது.