January 5, 2026
  • January 5, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • என் ஊக்கத்தை தடுத்த தவறானவர்கள் – வரலட்சுமி வெளியிட்ட கடிதம்
January 25, 2020

என் ஊக்கத்தை தடுத்த தவறானவர்கள் – வரலட்சுமி வெளியிட்ட கடிதம்

புகழ்பெற்ற நடசத்திரத்தின் வாரிசு என்பதற்காக யாரும் வாய்ப்புகளை அள்ளிக்கொண்டு வந்து கொட்டிவிடுவதில்லை. அது ஒரு ‘விசிட்டிங் கார்ட்’ என்ற அளவில் அவரவர்களே தங்கள் திறமை மூலம் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

அப்படி உயர்ந்தவர்கள்தான் பிரபு, கார்த்திக், ராதாரவி, விஜய், சூர்யா, கார்த்தி போன்றோர். அதிலும் இந்த ஆணாதிக்க உலகில் பெண் வாரிசுகள் பெருமை பெறுவதும் அற்புதமான நிகழ்வுகள். அப்படி நடிகவேளின் மகள் ராதிகா, ஸ்ருதி ஹாசன் புகழ்பெற்றிருக்கின்றனர். இதில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியையும் இணைத்துக் கொள்ளலாம். 

ஆண்களே தங்களை நிலைநிறுத்திக்கொள்ள போராடும் உலகில் வரலட்சுமி 25 படங்களை முடித்திருப்பது சாதனைதான். இந்த சாதனைக்கு நன்றி தெரிவித்து அவர் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். 

அதில் தன்னுடன் ஒத்துழைத்தவர்களுக்கு மட்டுமல்லாமல், தனது வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருந்தவர்களையும் குறிப்பிட்டு நன்றி சொல்லியிருக்கிறார். அதிலிருந்தே அவர் எப்படியான இக்கட்டுகளில் இருந்து மீண்டு வந்திருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம்.

அந்தக் கடிதம் கீழே…

Varalaxmi Saarathkumar Letter

Varalaxmi Saarathkumar Letter