November 22, 2024
  • November 22, 2024
Breaking News
June 2, 2020

சென்னையில் சேவையைத் தொடங்கியது ஊபர் கால் டாக்சி

By 0 574 Views

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய பொது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட தைத் தொடர்ந்து அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடங்கின.

கால் டாக்சி சேவையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஊபரும் சேவையை நிறுத்தியது.

மே மாதம் 25-ந்தேதி உள்நாட்டு விமான சேவையை மத்திய அரசு தொடங்கியதனால் விமான நிலையத்திற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே நேற்றில் இருந்து ஆட்டோ, கால் டாக்சி போன்றவை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையின் பல பகுதிகளில் இருந்து விமான நிலையத்திற்கு செல்ல சேவையை தொடங்கியுள்ளோம். “பாதுகாப்பான பயணத்திற்கு எங்களை அழைக்கலாம்…” என ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணம் செய்ய விரும்புவோர்கள் UberGo, Uber Premier and Uber XL மூலம் அனுகலாம். அரசு அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் பாதுகாப்பான, வசதியான, நம்பகமான பயணத்தை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்கு மண்டல  ஊபரின்  தலைவர் கூறுகையில் ‘‘நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து விமான நிலையத்திற்கு மீண்டும் சேவையை தொடங்கியதன் மூலம் மகிழ்ச்சி அடைகிறோம்.

டிரைவர்கள் வருவாய் ஈட்ட இது நல்ல வாய்ப்பு. எங்களது டிரைவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியற்றை உறுதி செய்யும் வகையில் விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்ந்து பணிபுரிவோம்’’ என்றார்.

விமானம் பிடிக்க போகிறவர்களுக்கு நற்செய்தி..!

அம