November 23, 2024
  • November 23, 2024
Breaking News
May 30, 2020

காட்சி ஊடகங்களில் சாதி மத பிரச்சனை தென்பட்டால் புகார் அளிக்க வேண்டிய முகவரி

By 0 602 Views

சமூக வலைதளங்கள், டிவிக்கள், மற்றும் ஒடிடி தலங்கள், ஆன்லைன் தொடர் உள்ளிட்டவற்றில், ஜாதி, மத துவேஷத்தை தூண்டும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பினால், அது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்க வேண்டிய முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஜீ 5 எனும் ஓடிடி தளத்தில் வெளியான ‘காட்மேன்’ டீசரில், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த தொடரை தடை செய்ய வலியுறுத்தி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக,ஐ.பி.சி., சட்டப்பிரிவு 292, 293, 294(b), 504, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சமூக வலைதளங்கள், டிவிக்கள், மற்றும் ஒடிடி தலங்கள், ஆன்லைன் தொடர் உள்ளிட்டவற்றில், ஜாதி, மத துவேஷத்தை தூண்டும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பினால், அது குறித்து புகார் அளிக்க வேண்டிய முகவரி :

SecretaryGeneral,
BCCC
c/o indian Broadcasting foundation,

B- 304, 3rd floor,

Ansal plaza,
Khelgaon Marg,

New delhi 110049.

email: ibf@ibfindia.com