January 24, 2026
  • January 24, 2026
Breaking News
November 25, 2019

ஜோதிகா கார்த்தி நடிக்கும் தம்பி முடிவடைந்தது

By 0 919 Views
வயாகம்18 ஸ்டுடியோஸ் & பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் ‘தம்பி.’
 
‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். ‘பாபநாசம்’ மாதிரி இதுவும் ஒரு ஃபேமிலி டிராமா, திரில்லர் கதைதான். நகைச்சுவை, ஆக்‌ஷன்ஸ் , எமோஷன்ஸ், திரில்லிங் மொமண்ட்ஸ் எல்லாமே இந்த ‘தம்பி’யில் அமைந்துள்ளது.
 
இதில் ஜோதிகா அக்காவாகவும், தம்பியாக கார்த்தியும் நடித்துள்ளது சிறப்பு மிகுந்தது. இது போக கார்த்தி சுறுசுறுப்பான இளைஞர் வேடத்தில் நடித்துள்ளார். அப்பா அம்மாவாக சத்யராஜ், சீதா நடித்துள்ளார்கள். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.
 
சென்னை, மேட்டுபாளையத்தில் 17 நாட்களும், கோவாவில் 50 நாட்களும் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.
 
த்ரில்லர், காமெடி, ஃபேமிலி, ஆக்‌ஷன் என எல்லா ஜானர்களிலும் படம் இயக்கி வெற்றிபெற்ற மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப், நேரடி தமிழ் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார். வருகிற 30ம் தேதி பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. டிசம்பர் 20-ம் தேதி வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
 
இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.