January 30, 2026
  • January 30, 2026
Breaking News
September 28, 2019

பொதுத் துறை ஊழியர்களுக்கு தமிழக அரசின் போனஸ் அறிவிப்பு

By 0 1389 Views

தமிழக அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்…

மாநில அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி போனஸ் பெற உச்சவரம்பு ரூ. 21 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் குரூப் சி-டி ஊழியர்களுக்கு 2018-2019-ம் ஆண்டுக்கான போனஸ் 8.33 மற்றும் ஊக்கத்தொகை 1.67 சதவீதம் என மொத்தம் 10 சதவீதம் வழங்கப்பட உள்ளது.

மேலும், போக்குவரத்து துறை, டி.என்.இ.பி., தமிழ்நாடு தேயிலை கார்ப்பரே‌ஷன், அரசு ரப்பர் கார்ப்பரே‌ஷன் லிமிடெட், தமிழ்நாடு வனத்தோட்ட கார்ப்பரே‌ஷன், நிர்வாகத்துறைகளில் பணிபுரிபவர்களுக்கு கடந்த ஆண்டை போன்று தனித்தனியே உத்தரவு பிறப்பிக்கப்படும்..!” என்று கூறப்பட்டுள்ளது.