September 25, 2026
  • September 25, 2026
Breaking News
January 6, 2020

இளையராஜா வீட்டில் தயாரான தமிழரசன் பின்னணி இசை

By 0 1020 Views

தமிழ்ப்பட இசையின் முன்னணி நாயகர் இன்று வரையிலும் இளையராஜா மட்டும் தான்.

எஸ் என் எஸ் மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி தயாரிப்பில் ,பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில்,
விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன்  நடித்துள்ள தமிழரசன் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு இப்போது நடந்து வருகிறது.

ஏற்கெனவே பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை இளையராஜா ஒரு இசை அமைப்பாளர் ஹீரோவாக நடித்த படத்திற்கு இசை அமைத்ததில்லை. விஜய் ஆண்டனிக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

இது ஒரு புறமிருக்க இளையராஜா வழக்கமான இசையமைக்கும் பிரசாத் ஸ்டூடியோ கேட்டுக் கொண்டபடி அவரால் அங்கு இசைப்பணியைத் தொடர முடியாத நிலையில் தமிழரசன் படத்திற்காக  இசைஞானி இளையராஜா முதன்முதலாக பின்னணி இசையை தன் வீட்டில் வைத்து செய்து வருகிறார்.

இத்தனை ஆண்டுகால இசைப் பயணத்தில் பின்னணி இசையை தன் வீட்டில் நடத்தியதே இல்லை. ஒட்டுமொத்த வாத்தியக் கலைஞர்களையும் வீட்டுக்கு வரவழைத்து தமிழரசன் பின்னணி இசையை லைவ்-ஆக நடத்தி அசத்தி  இருக்கிறார் இளையராஜா.

2020-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த பின்னணி இசை மற்றும் பாடல்களைக் கொண்ட படமாக தமிழரசன் இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.