November 25, 2024
  • November 25, 2024
Breaking News

Tag Archives

அஞ்சாமை திரைப்பட விமர்சனம்

by on June 7, 2024 0

அரசின் கொள்கை முடிவுகள் தவறானவை என்றால் அரசையே எதிர்த்துக் கேள்வி கேட்க முடியும் என்று சொல்லும் படம்தான் இது. இதற்கு ‘அஞ்சாமை’ என்று தலைப்பிடப்பட்டு இருப்பது மெத்தப் பொருத்தம் அதற்கு இயக்குனர் சுப்புராமன் தேர்ந்தெடுத்திருக்கும் களம், மருத்துவக் கல்வி கற்க அத்தியாவசியமானதாக ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தகுதித் தேர்வு. நீட் தேர்வு முறையை தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களும்… குறிப்பாக நாட்டு மக்களும் எதிர்த்து வரும் நிலையில் அது வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி […]

Read More

அஞ்சாமை நிகழ்வில் மம்மூட்டியிடம் மன்னிப்புக் கேட்ட இயக்குனர் சுப்புராமன்

by on June 2, 2024 0

அஞ்சாமை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முழுமையாக ஒரு படத்தினை வாங்கி வெளியிடும் படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இதனை இயக்கியுள்ளார். விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ராகவ் பிரசாத் இசையமைக்க, கலா […]

Read More

‘நீட்’டை மையப்படுத்திய அஞ்சாமை – ஒட்டுமொத்த உரிமை பெற்ற ட்ரீம் வாரியர்ஸ்

by on May 25, 2024 0

நீட் தேர்வை மையப்படுத்திய ’அஞ்சாமை’ படத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் முதன்முதலாக பெற்ற ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தமிழகத்தில் செயல்பட்டு வந்த மருத்துவ தேர்வு கல்வி முறையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நிலையங்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் ஏற்பட்டன. நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட அவதிகளை மையப்படுத்தி இதுவரை எந்தவொரு படமும் வெளியாகவில்லை. நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், […]

Read More

விளையாட்டு வினையானால் எங்கு போய் முடியும் என்பதுதான் லால் சலாம் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

by on February 6, 2024 0

*லால் சலாம் திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு*  பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஸ்கரன் மற்றும் தலைமை நிர்வாகி ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஆகியோரின் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ திரு.ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இவர்கள் நடிப்பில் ரஜினிகாந்த் அவர்களின் மகளும் இயக்குனருமான திரு.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் *லால் சலாம்* படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை […]

Read More

குய்கோ என்றால் குடியிருந்த கோயில் என்பதன் சுருக்கம் – இயக்குனர் அருள் செழியன்

by on November 22, 2023 0

நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியாகிறது குய்கோ எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், ஶ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை […]

Read More

நல்ல கதை இருந்தால் சின்ன பட்ஜெட் படங்களை எடுக்கலாம் – இறுகப்பற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

by on October 13, 2023 0

சின்ன பட்ஜெட்டில் அதேசமயம் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களைத் தொடர்ந்து தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த அக்-6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று மாலை நடைபெற்ற நன்றி […]

Read More

இறுகப்பற்று திரைப்பட விமர்சனம்

by on October 4, 2023 0

படத்துக்குப் படம் கத்தி, சுத்தி, துப்பாக்கி, பீரங்கி, ரத்தம் என்று சுத்திச் சுத்தி அடித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் இது போன்று எப்போதோ அபூர்வமான குடும்ப நலன் பேசக்கூடிய படங்கள் வருகின்றன – அதை முதலில் வரவேற்க வேண்டும். இதுபோன்று ஆரோக்கியமான படங்களைத் தருவதற்கென்றே உருவாக்கப்பட்டிருக்கும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோசும், அதே பொட்டன்ஷியலுடன் நல்ல படங்களை மட்டுமே எடுப்பேன் என்கிற அளவில் நேர்த்தியான கதைகளை எழுதி இயக்கிக் கொண்டிருக்கும் யுவராஜ் தயாளனும் சேர்ந்திருப்பதால் இந்தப் படத்துக்கு சற்று எதிர்பார்ப்பு […]

Read More

ஆற்றல் திரைப்பட விமர்சனம்

by on October 14, 2022 0

அஜித் படத்துக்கு பிடித்ததைப் போல் அருமையான தலைப்பு பிடித்து விட்ட இயக்குனர் கே.எல்.கண்ணன், அஜித் கிடைக்காத நிலையில் ஆளில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல் விதார்த்தைப் பிடித்து விட்டார். ஆனால் விதார்த் ஒன்றும் நடிக்கத் தெரியாத நாயகன் இல்லை. படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளைத் தேடித் தேடி நடித்து வரும் அருமையான நடிகர் அவர் என்றிருக்க, இந்த படத்தில் அப்படி என்ன வித்தியாசமான கதை? அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட விதார்த், கார் மெக்கானிக் […]

Read More

வெற்றிமாறன் வெளியிட்ட என்றாவது ஒருநாள் கொங்கு மண்டல உண்மைக்கதை

by on November 19, 2020 0

சமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன. நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இணைகிறார் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி. பல சம்பவங்கள் நாளிதழில் சிறு செய்தியாக வந்திருக்கும். அதை படித்துவிட்டு எளிதில் கடந்துவிடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. மனிதக் […]

Read More
  • 1
  • 2