March 1, 2026
  • March 1, 2026
Breaking News

Tag Archives

காவேரி மருத்துவமனை, ISCCM மற்றும் ஐஐடி மெட்ராஸ் இணைந்து நடத்திய சென்னையின் முதல் தீவிர சிகிச்சைக்கான செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டாதான்..!

by on February 26, 2026 0

சென்னை, பிப்ரவரி 25, 2026: இந்திய தீவிர சிகிச்சை மருத்துவ சங்கம் (ISCCM), காவேரி மருத்துவமனைகள் மற்றும் ஐஐடி மெட்ராஸ் (IIT-M) ஆகியவை இணைந்து, ‘தீவிர சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டாதான் 2026’ நிகழ்வை வெற்றிகரமாக நடத்தின. சென்னையில் நடைபெற்ற ISCCM-இன் 32-வது ஆண்டு மாநாட்டின் ஒரு பகுதியாக அமைந்த இந்நிகழ்வு, உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தரவு அறிவியல் நிபுணர்களை ஒருங்கிணைத்தது. பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்ற […]

Read More

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் 47 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘KHxRK’

by on February 21, 2026 0

இந்திய திரையுலகம் மறக்க முடியாத வரலாற்று தருணத்தை காணத் தயாராகிறது. இந்திய சினிமாவின் இரு பெரும் நாயகர்கள் — ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் — 47 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரே படத்தில் இணைகின்றனர். தற்காலிகமாக “KHxRK” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாபெரும் திரைப்படம், ரசிகர்களுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் சிறப்பான திரை அனுபவமாக அமையும். 1970களின் இறுதியில் கடைசியாக இணைந்து நடித்த இந்த இரு திரை ஜாம்பவான்கள், தற்போது மீண்டும் இணைவது இந்திய திரைப்பட வரலாற்றில் […]

Read More

கூலி திரைப்பட விமர்சனம்

by on August 14, 2025 0

ரஜினி படம் என்கிற பிராண்ட் ஒன்று போதும்… அதற்குள் என்ன கதையையும் வைக்கலாம் – என்ன தலைப்பு வைத்தும் கதை சொல்லலாம்.  அப்படி லாஜிக் எல்லாம் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு கொலையுண்ட தன் நண்பனைக் கொன்றவர்களைப் பழிவாங்க புறப்படுகிறார் ரஜினி. உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான அவர் தன்னுடைய சக தொழிலாளர்களுக்காக எப்படி தன் வாழ்வை அர்ப்பணித்தார் என்பதும் ஃப்ளாஷ் பேக்காக சொல்லப்படுகிறது. ரஜினியின் நண்பனாக சத்யராஜ். விஞ்ஞானியான அவர் தனது கண்டுபிடிப்பு ஒன்றுக்கான உரிமம் […]

Read More

வெளியான 5 மணி நேரத்தில் ஒரு கோடி பார்வையை நெருங்கும் கூலி ட்ரெய்லர்

by on August 3, 2025 0

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பிரம்மாண்ட படமான கூலி படத்தின் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியானது. வெளியான 4 மணி நேரத்தில் 7.9 மில்லியன் பார்வைகளை தாண்டி இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் ஒரு கோடி பார்வைகளைத் தொடவிருக்கிறது. ரஜினியுடன் இப்படத்தில் ஆமிர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சபீர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித் நடித்திருக்கிறது. கூலி படத்தின் […]

Read More

ரஜினியின் கூலி திரைப்படத்தின் மலேசிய விநியோக உரிமைகளைப் பெற்றுள்ளது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன்..!

by on July 20, 2025 0

டத்தோ அப்துல் மாலிக் அவர்களின் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, பிளாக்பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், பிரபலமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான கூலியின் மலேசிய திரையரங்க விநியோக உரிமைகளைப் பெற்றுள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்தத் திரைப்படத்தின் இசையை சென்சேஷனல் அனிருத் இசையமைத்துள்ளார், இது இந்த சக்திவாய்ந்த கூட்டணிக்கு மேலும் உற்சாகமான அம்சத்தை சேர்க்கிறது. தங்களின் தைரியமான மற்றும் தாக்கமுள்ள வெளியீடுகளுக்குப் பெயர் பெற்ற மாலிக் ஸ்ட்ரீம்ஸ், […]

Read More

ரிலீஸ்க்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் கூலி!

by on July 6, 2025 0

சன் பிக்சர்ஸின் கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் சாதனை படைக்கிறது, ரஜினிகாந்த் படங்களில் முக்கியமான ஒன்றாக மாற உள்ளது..! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள சன் பிக்சர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கூலி, இதுவரை வெளிநாடுகளில் அதிக திரையில் ரிலீஸ் செய்யப்படும் ஒரு தமிழ் படம் என்ற சாதனையை பெற்று தலைப்புச் செய்திகளில் இடம் பெறப்போகிறது உறுதி .ரஜினி உடன் கூலி படத்தில் இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த நாகார்ஜுனா, சத்யராஜ், […]

Read More

வேட்டையன் திரைப்பட விமர்சனம்

by on October 10, 2024 0

இது சூப்பர் ஸ்டார் ரஜினி படம் என்றாலும், அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனிலிருந்துதான் கதை தொடங்குகிறது. மூத்த வழக்கறிஞராக இருக்கும் அவர் பதவியேற்கவிருக்கும் காவல்துறையினருக்குப் பாடம் எடுப்பதில் இருந்து படமும் ஆரம்பிக்கிறது. அதற்குப் பின் வழக்கமான பீடிகைகளுடன் ரஜினிகாந்தின் அறிமுகம் நிகழ்கிறது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வரும் அவர் அறிமுகமாகும் போதே துப்பாக்கியைக் கையில் பிடித்தபடி பொட்டு பொட்டென்று சுட்டுக் கொண்டே வருகிறார்.  ஒரு பக்கம் வழக்கை ஆராய்ந்து உண்மைக் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதே சட்டத்தைக் […]

Read More

ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’  வெளியானது!

by on September 9, 2024 0

*’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல் “மனசிலாயோ”  வெளியானது!* லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படமான ‘வேட்டையன்’ படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பாடலானது வெளியாகியுள்ளது, மேலும் இது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. “மனசிலாயோ” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல், ஆற்றல்மிக்க தாளங்கள் மற்றும் ஆத்மார்த்தமான மெல்லிசைகளின்  கலவையாக மட்டுமல்லாமல், இது படத்தின் கருப்பொருள்களான வலிமை, உறுதிநிலை மற்றும் அதிரடியான காட்சிகள் ஆகியவற்றின் சாரத்தை முழுமையாகப் படம் பிடிக்கிறது. சமகால […]

Read More

வாரிக் குவித்த ஜெயிலர் 2 நாள் வசூல்

by on August 12, 2023 0

சன் டிவி தயாரித்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெளியான 10 ஆம் தேதி அன்று இந்தியாவில் சுமார் 53 கோடி வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இரண்டாம் நாளான 11ம் தேதியின் வசூலையும் சேர்த்துப் பார்த்தால் இரண்டு நாளில் 75 கோடி ரூபாய் வசூலானதாகத் தெரிகிறது. இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் சக்கை போடு போட்டு வரும் ஜெயிலர் இரண்டு நாள் உலக வசூல் 150 கோடியாக இருக்கும் என்கிறார்கள் திரைப்பட ஆய்வாளர்கள். […]

Read More

ஜெயிலர் திரைப்பட விமர்சனம்

by on August 12, 2023 0

ஒரு காலத்தில் நம் ஹீரோக்கள் எல்லாம் தன் பெற்றோரைக் கொன்றவர்களைப் பழி தீர்த்துக் கொண்டிருந்தார்கள். இது ஹீரோக்களின் (வயதான) சீசன் 2 என்பதால் மகன்களைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க அதே ஹீரோக்கள் புறப்பட்டருக்கிறார்கள். இதிலும் ரஜினி அப்படி நேர்மையாக வளர்த்த தன் பிள்ளையை அந்த நேர்மைக்காகவே பறிகொடுக்க நேர, அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து பழி தீர்க்கும் கதைதான். இந்தக் கதை எல்லாம் தேவையே இல்லை – ரஜினி ஒரு படத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு தனி பிராண்ட் […]

Read More