January 15, 2025
  • January 15, 2025
Breaking News
August 12, 2023

வாரிக் குவித்த ஜெயிலர் 2 நாள் வசூல்

By 0 359 Views

சன் டிவி தயாரித்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெளியான 10 ஆம் தேதி அன்று இந்தியாவில் சுமார் 53 கோடி வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

இரண்டாம் நாளான 11ம் தேதியின் வசூலையும் சேர்த்துப் பார்த்தால் இரண்டு நாளில் 75 கோடி ரூபாய் வசூலானதாகத் தெரிகிறது.

இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் சக்கை போடு போட்டு வரும் ஜெயிலர் இரண்டு நாள் உலக வசூல் 150 கோடியாக இருக்கும் என்கிறார்கள் திரைப்பட ஆய்வாளர்கள்.

வரும் சுதந்திர தினம் வரை விடுமுறையாக இருப்பதால் இந்த வசூல் அடுத்த இரண்டு நாட்களில் இன்னும் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கலாம்.