November 21, 2024
  • November 21, 2024
Breaking News

Tag Archives

உதவி இயக்குநர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை

by on October 22, 2018 0

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘கூகை திரைப்பட இயக்கம்’ ஏற்பாடு செய்திருந்த ’96’ படக்குழுவினரின், உதவி இயக்குநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கூகை நூலகத்தில் நடைபெற்றது.   இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர் வசந்தபாலன் எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், தமிழ் பிரபா, பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், நடிகர்கள் பகவதி பெருமாள், ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.   இந்நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி,   […]

Read More

வாசித்தால்தான் எழுத்துக்கு கற்பனை செய்ய முடியும் -கூகை நூலகத் திறப்பில் பா.இரஞ்சித்

by on October 5, 2018 0

இயக்குனர் பா.இரஞ்சித் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு உதவும் வகையில் கூகை திரைப்பட இயக்கம் எனும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதற்காக பெரும் நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் நண்பர்கள் உதவியோடு அந்த முயற்சியைத் தொடங்கியிருக்கிறார். சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் கூகை திரைப்பட இயக்கம் அமைப்பின் அலுவலகத்தை ‘சாய்ரட்’ பட இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைக்க இயக்குனர் ராம், லெனின் பாரதி, மாரிசெல்வராஜ் உள்ளிட்ட திரைத்துறை சார்ந்த இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் […]

Read More

கடைசிவரை பா.ரஞ்சித் அண்ணா கூடவே இருப்பேன் – மாரி செல்வராஜ்

by on October 4, 2018 0

சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக ‘பரியேறும் பெருமள்’ படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா RK, கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் […]

Read More

பரியேறும் பெருமாள் திரைப்பட விமர்சனம்

by on September 28, 2018 0

மின்விசிறிக் காற்றுக்கும், பதனம் செய்யப்பட்ட குளிருக்கும் பழக்கப்பட்டுவிட்ட நம் உடல் கூட ஜன்னலோரம் எப்போதோ வீசும் இயற்கைக் காற்று பட்டதும் சிலிர்க்கிறது அல்லவா..? வெள்ளித்திரையிலும் அதுபோன்ற ஒரு அனுபவம் எப்போதாவதுதான் நேரும். அப்படியான ஒரு சிலிர்ப்புதான் இந்தப்படம். ஆதிக்க மனிதர்களின் சுயநல வக்கிரத்தால் பின்தங்கிவிட்ட சமூகத்தில் பிறந்த ஒரு மனிதன், வாழ்வாதாரம் மட்டுமல்லாமல் கல்வி, காதல், தேடல், வழிகாட்டல் என்று வாழ்வின் சகல தேவைகளுக்கும் எப்படிப் போராட நேர்கிறது என்கிற ஒற்றைக் கோடுதான் கதையின் ஒற்றை வரியும். […]

Read More

கிம்பல் என்ற புதிய ஒளிப்பதிவு நுட்பத்தில் உருவான பரியேறும் பெருமாள்

by on September 25, 2018 0

பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர் ,கயல் ஆனந்தி ,யோகிபாபு, லிஜிஸ் நடிக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’ .செப்டம்பர் 28 படம் வெளியாகும் இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பையும் ‘கிம்பல்’ என்ற தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள். இந்த தொழில்நுட்பம் மற்றும் படத்தைப் பற்றி படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகிறார்… “பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம் , முதல் படம் மாலை நேரத்து மயக்கம் . நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான் எனக்கு அதிகமாக கிராமத்து வாழ்க்கைபற்றி […]

Read More

என் மனைவி கொடுத்த தைரியம்தான் பரியேறும் பெருமாள் – பா.இரஞ்சித்

by on September 10, 2018 0

‘நீலம் புரொடக்சன்ஸ்’ சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் ‘பரியேறும் பெருமாள்.’ இத்திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் கலைஞர்களுடன் தன் சீடனுக்காக இயக்குநர் ராம் கலந்து கொண்டார். இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான் இந்தப்பட இயக்குநர் ‘மாரி செல்வராஜ்’என்பது குறிப்பிடத் தக்கது. நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில்… “ஒரு தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே பிறக்கிறது. அப்படி எனக்கு முன்னோடியாக புரட்சியாளர் […]

Read More

காலா திரைப்பட விமர்சனக் கண்ணோட்டம்

by on June 7, 2018 0

31 வருடங்களுக்கு முன் கமல் நடித்து வெளியான ‘நாயகன்’ படத்தை நினைவுபடுத்தும் படம். அதில் எப்படி மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த வேலு நாயக்கர் அந்தப் பகுதி மக்களுக்கான வாழ்விடத்தைத் தக்கவைக்கவும், அந்தப் பகுதி மக்களின் வாழ்வுரிமைகளுக்காகவும் போராடி மாண்டாரோ அதே தேவைகளுக்காக இதில் தாராவியிலிருக்கும் அடித்தட்டு மக்களின் அறிவிக்கப்படாத தலைவராக இருக்கும் திருநெல்வேலித் தமிழரான ‘காலா’ என்கிற கரிகாலன் போராடி மாளும் கதை. தாராவி குடியிருப்பை காலி செய்து கட்டடம் கட்ட ஆதிக்க சக்தி படைத்த […]

Read More