November 22, 2024
  • November 22, 2024
Breaking News

Tag Archives

வலியின் மொழி புரிந்தால் நந்தன் படம் உங்களுக்குப் பிடிக்கும் – சீமான்

by on September 13, 2024 0

*நந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா* Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை- ஊடக -பண்பலை- நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. […]

Read More

80ஸ் பில்டப் திரைப்பட விமர்சனம்

by on November 25, 2023 0

‘கதை கதையாம் காரணமாம், காரணத்தில் தோரணமாம்..’ என்கிற டைப் கதை இது. சில காமெடிகளைக் கையில் வைத்துக்கொண்டு அதற்கு மேல் சில காரணங்களை அடுக்கி அந்தக் காரணங்களின் மேல் சில காட்சிகளை அடுக்கி அதன் மீது ஒரு கதை சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குனர் கல்யாண். அதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் காலம் எண்பதுகளில் அமைகிறது. கமலும் ரஜினியும் உச்சத்தில் இருந்த அந்தக் காலகட்டத்தில் கமல் ரசிகராக நாயகன் சந்தானமும், (அவரை வெறுப்பேற்றுவதற்காகவே) ரஜினி ரசிகராக அவரது தாத்தா ஆர்.சுந்தர்ராஜனும் […]

Read More

சசிகுமாரின் தலைப்பு மாறிய படம் ‘நான் மிருகமாய் மாற’ – நவம்பர் வெளியீடு

by on October 18, 2022 0

TD ராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிக்கும் ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சத்திய சிவாவின் இயக்கத்தில், இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் படத்தின் நாயகனாக நடித்துள்ளார். ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதே படத்தின் கதை. மேலும் இந்தத் திரைப்படத்தில் சசிகுமார் ஒலி பொறியாளராக நடித்துள்ளார். ஒருவனின் வாழ்க்கையை எவ்வாறு ஒலி மாற்றுகிறது என்பதே படத்தின் திருப்புமுனையாக அமையும், […]

Read More

மஹா திரைப்பட விமர்சனம்

by on July 23, 2022 0

ஒரு முன்னணி ஹீரோ எவ்வளவு வயதானாலும் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் நடித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு கதாநாயகி, கதாநாயகியாகவே வாழும் காலம் சினிமாவில் மிகக் குறைவுதான். இதில் விதிவிலக்காக சில கதாநாயகிகள் மட்டும் காலங்கள் போனாலும், களை இழக்காமல் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் கதாநாயகியாக பல இந்திய மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி இந்த மஹா படத்தின் மூலம் தன்னுடைய அரை சதத்தை நிறைவு செய்கிறார். […]

Read More

தேஜாவு திரைப்பட விமர்சனம்

by on July 22, 2022 0

இல்லாததை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டிருக்கும் பல உளவியல் கதாபாத்திரங்களை நாம் படங்களில் பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு ஆரம்பம் இந்த படத்திலும் இருக்கிறது. காவல் நிலையத்துக்கு வரும் ஒரு எழுத்தாளர், தான் எழுதும் கதையில் வரும் பாத்திரங்கள் தன்னை மிரட்டுவதாகவும் அவர்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டும் புகார் ஒன்றை அளிக்கிறார். அந்தப் புகாரைக் கேட்டு காவல் நிலையம் சிரிக்கிறது. ஆனால் மறுநாள் காலையில அவர் வீட்டுக்கு வரும் போலீஸ் காணாமல் போன ஒரு பெண்ணைப் பற்றிய ஒரு கேஸ் […]

Read More

டாணாக்காரன் லொகேஷனை 40 நகரங்களில் தேடிய இயக்குனர்

by on April 1, 2022 0

டிஸ்னி + ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி தளத்தில் இணையற்ற திறமையுடன், அதன் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளது. துல்லியமாக சொல்வதானால், இந்த முதல் தர ஓடிடி இயங்கு தளம், தமிழ் பார்வையாளர்களுக்கு வரப்பிரசாதமாக, ‘பிளாக்பஸ்டர்’ கதைகளின் மையமாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் அற்புதமான பொழுதுபோக்குகளை வழங்கிய டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், தற்போது இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள “டாணாக்காரன்” படத்தை, திரைப்பட ஆர்வலர்களுக்காக ஏப்ரல் 8, 2022 அன்று […]

Read More

தமிழ் சினிமாவில் புதிய டைம் லூப் முயற்சி – ஜாங்கோ இசை வெளியீடு

by on September 6, 2021 0

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது. எத்தனையோ வித்தியாசமான படைப்புகளை கண்டுள்ள தமிழ் திரைப்பட உலகில் புதியதோர் முயற்சியாக டைம் லூப் எனப்படும் நேர வளையம் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது இந்த படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. தேனியைச் சேர்ந்த மனோ கார்த்திகேயன், இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் […]

Read More

பாண்டியர்களின் வரலாற்றை கூறும் படம் கொற்றவை – சி வி குமார்

by on August 14, 2021 0

வரலாற்று பின்னணியில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே எப்போதும் அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் சி வி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொற்றவை: தி லெகசி’ படத்தின் டீஸர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘இது கதையல்ல, 2 ஆயிரம் வருட நம்பிக்கை’ என்று டீசரில் இடம் பெற்ற வசனம் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. யுபிஎஸ்சி பயிற்சியாளராக இருக்கும் வடிவு, ஒரு கட்டத்தில் புதையல் ஒன்றை தேட ஆரம்பிக்கிறார் . இந்தப் பயணத்தின் போது பல […]

Read More