March 3, 2026
  • March 3, 2026
Breaking News
  • Home
  • Director Raju Murugan

Tag Archives

நல்ல இயக்குநரும் நல்ல தயாரிப்பாளரும் எப்போதும் ஜெயிக்க வேண்டும்..! – சசிகுமார்

by on February 19, 2026 0

“மை லார்ட்” பட நன்றி அறிவிப்பு விழா ! ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் […]

Read More

மை லார்ட் திரைப்பட விமர்சனம்

by on February 11, 2026 0

‘மனிதர்கள் இறக்கிறார்கள் – ஆனால் மனிதம்  மரிப்பதில்லை.! என்பதுதான் படத்தின் அடிநாதம். அதைச் சொல்வதற்கு தமிழ்ப்படவுலகில் சசிகுமாரை விட்டாலும் ஆளில்லை. தலைப்பைப் பார்த்து இது ஏதோ நீதி மன்றம் சம்பந்தப்பட்ட கதை என்று நினைத்துவிட வேண்டாம். அதிகார மமதையில் ஆதிக்கம் செலுத்த நினைப்பவர்களுக்கு ஒரு சாமானியன் தீர்ப்பு எழுத வாய்ப்புக் கிடைத்தால் அந்தத் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதுதான் கதை. அப்படி அதிகார போதை கொண்ட மத்திய மந்திரியான ஆஷா சரத்துக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதாக, மாற்று […]

Read More

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடந்த “மை லார்ட்” படக்குழுவின் நேரடி சந்திப்பு!

by on February 10, 2026 0

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  நேற்று ஆயிரக்கணகான ரசிகர்கள் முன்னிலையில்,  பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர்  ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பாடல் பாடி, பட வசனங்கள் பேசி, […]

Read More

அதிகாரம் கடைக்கோடி மனிதனின் கையில் கிடைத்தால் அவன் என்ன செய்வான்..? – சசிகுமார்

by on February 8, 2026 0

*சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியில் ‘ மை லார்ட் ( My Lord) திரைப்பட இசை வெளியீட்டு விழா* ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் […]

Read More

ஜப்பான் திரைப்பட விமர்சனம்

by on November 11, 2023 0

தவறுகளால் தகவமைக்கப்பட்ட ஒரு மனிதனின் கதை இது. படம் முடியப் போகும் கடைசி நிமிடத்தில் கூட அவன் தன் தவறுகளை திருத்திக்கொள்ளவே இல்லை என்பது இந்த படத்தில் ஆச்சரியமான விஷயம். ஆனால் தவறு செய்தவனை தாய் கூட மன்னிக்க மாட்டாள் என்பதுதான் படம் சொல்லும் செய்தி. இந்தச் செய்தியை தவறு செய்தவனின் பாதையிலேயே போய் நமக்குப் புரிய வைக்கிறார் இயக்குனர் ராஜுமுருகன். படம் முழுவதும் தவறான மனிதனாகவே வருவதற்கு ஒரு ஹீரோவுக்கு மிகப்பெரிய தில் வேண்டும் அந்த […]

Read More

பருத்தி வீரனுக்குப் பிறகு வசனங்கள் மாஸாக இருப்பது ஜப்பானில்தான் – கார்த்தி கல கல

by on November 6, 2023 0

எண்ணிக்கை மட்டுமே முக்கியம் – அதன் மூலம் பணத்தை எண்ணிக் கொண்டிருப்பது மட்டுமே முக்கியம் என்று நினைக்காமல் நல்ல ரசனைக்கு வித்தாகம் படங்களில் மட்டுமே நடிக்கும் வழக்கம் உள்ள கார்த்திக்கு அவர் நடிப்பில் அடுத்த வெளியாக இருக்கும் ஜப்பான் அவரது 25வது படமாக அமைகிறது. தீபாவளி விருந்தாக அனைவருக்கும் அந்தப் படம் குறித்து கார்த்தியின் கலகலப்பான பேட்டி இது… படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது, உங்களுக்கும் முதலில் கதை கேட்கும்போது அப்படித்தான் இருந்ததா? […]

Read More

கார்த்தியின் 25வது படம் – ராஜு முருகன் இயக்கும் ஜப்பான்

by on November 8, 2022 0

தரமான, அர்த்தமுள்ள திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து முத்திரை பதித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அடுத்த பிரம்மாண்டப் படைப்பான ‘ஜப்பான்’ படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமா இதுவரை பாத்திராத கதாபாத்திரங்கள், அவர்களிருக்கும் பிரச்சினைகள், அறம் சார்ந்த தீர்வு என தனது திரைப்படங்கள் மூலம் படைப்பாற்றலும், சமூகப் பொறுப்பும் சேர்ந்து இயங்க முடியும் என்பதை நிரூபித்து வரும் இயக்குநர் ராஜு முருகன்.  அப்படி, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, […]

Read More

ராஜு முருகனின் ஜிப்ஸி வெளியீட்டு தேதி அறிவிப்பு

by on February 23, 2020 0

’குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு ராஜூமுருகன் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ஜிப்ஸி’. ஜீவா, நடாஷா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ட்ரெய்லரில் மதவெறிக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றிருந்தது. இந்தப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் இந்த படம் சென்சார் சிக்கல் காரணமாக ரிலீஸ் செய்ய […]

Read More