October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • சசிகுமார்

Tag Archives

ப்ரீடம் திரைப்பட விமர்சனம்

by on July 9, 2025 0

படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடித்துக் கொண்டிருக்கும் சசிகுமார், இந்தப் படத்தில் தொப்புள்கொடி உறவுடன் ரத்தமும் சதையுமான ஒரு உண்மைக் கதையைத் தாங்கி நடத்திருக்கிறார். இதிலும் அவர் இலங்கைத் தமிழராகவே வருகிறார். 1991 ல் இலங்கையிலிருந்து கள்ளத்தோணி மூலம் தமிழ்நாட்டுக்கு வந்து சேரும் அவர் ராமேஸ்வரம் முகாமில் தங்க வைக்கப்படுகிறார். அங்கே ஏற்கனவே அவரது கர்ப்பிணி மனைவி லிஜோ மோல் ஜோஸ் அவர் வருகைக்காக காத்துக் கொண்டிருக்க, கணவனும் மனைவியும் சேர்ந்த அந்த சந்தோஷம் இரண்டு […]

Read More

நந்தன் திரைப்பட விமர்சனம்

by on September 19, 2024 0

“ஆள்வதற்கு மட்டுமல்ல வாழ்வதற்கே அதிகாரம் வேண்டும்…” என்ற நிலைப்பாட்டைக் கோட்பாடாக்கும், சமூக அடித்தட்டு மக்களின் கதைதான் நந்தன்.  சமூக நீதிக்காக அரசு ஆயிரம் திட்டங்கள் வகுத்தாலும், அவற்றைக் கூட ஆதிக்க சாதியினர் எப்படிக் கூட்டிப் பெருக்கி, கழித்துத் தங்களுக்குச் சாதகமாகக் கணக்குப் போடுகிறார்கள் என்பதை இதுவரை சொல்லாத களம் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன். “இப்படி எல்லாம் நடக்கிறதா என்று கேட்பவர்களைக் கைப்பிடித்து அங்கே அழைத்துச் சென்று காட்டத் தயாராக இருக்கிறேன்..!” என்று படத்தின் ஆரம்பத்தில் […]

Read More

கருடன் திரைப்பட விமர்சனம்

by on May 31, 2024 0

சூரியை ஒரு சூர்யா ஆக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தன் கரியரில் பாதியைப் பங்களித்து இருக்கும் வெற்றிமாறன், சசிகுமார் சமுத்திரகனி போன்றோர் பின்னணியில் இருக்க, அதை செயல்படுத்தி இருக்கும் இன்னொரு படம் இது. படிக்காத மேதை காலத்தில் இருந்து பல காலம் கலைத்துப் போட்டு எடுத்த கதைதான். உணவளித்து தன்னை வளர்த்த காரணத்துக்காக விசுவாசத்தில் நாய் போல அந்த குடும்பத்தின் நலனுக்காகவே சுற்றிவரும் ஒரு மனிதன் எப்படி அந்த குடும்பத்தின் காவல் தெய்வமாக வாழ்கிறான் என்பதுதான் […]

Read More

சூரி நாயகனாகும் ‘கருடன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ்

by on January 19, 2024 0

சூரி கதையின் நாயகனாக நடிக்கும் ‘கருடன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது… இயக்குநர் R S. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கருடன்’. இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.‌ இவர்களுடன் சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு […]

Read More

அயோத்தி திரைப்பட விமர்சனம்

by on March 3, 2023 0

அயோத்தி என்கிற தலைப்பைக் கேட்டதும் “ஏதோ பிரச்சனையைக் கிளப்புறாங்கப்பா..!” என்றுதான் தோன்றியது. ஆனால் படம் பார்த்து முடியும்போது கண்களில் துளிர்த்துக் கிளம்பிய கண்ணீர் அப்படியான எண்ணத்தைத் துடைத்தே இறங்கியது. அயோத்தியில் ஆரம்பிக்கிற கதை. அங்கே மத நம்பிக்கை மற்றும் ஆண் ஆதிக்கத்தில் ஊறிப்போன பல்ராம் (யஷ்பால் சர்மா) தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அன்பே உருவான அவரது மனைவி ‘இம்’மென்றால் அடி, ஏனென்றால் ‘இடி’ என்றே ஷர்மாவுடன் வாழ்ந்து வருகிறார். கல்லூரிக்குப் போகக்கூடாது என்கிற அவரது கட்டளையை […]

Read More

காரி திரைப்பட விமர்சனம்

by on November 24, 2022 0

காரி என்ற தலைப்புக்கு என்ன அர்த்தம்..? கடையெழு வள்ளல்களின் பெயர்களில் ஒன்றாக அது இருக்க, படம் அது சம்பந்தப்பட்டதோ என்றுதான் நினைக்க தோன்றியது. ஆனால் படத்தில் சொல்லப்படும் காரி, ஜல்லிக்கட்டு காளை வகையை சேர்ந்தது. மிகவும் அரிதான அந்த வகைக் காளைகளை ஜல்லிக்கட்டில் பிடிப்பது பெரும் சவாலாக இருக்கிறது. அத்துடன் ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய மான விளையாட்டு என்பதோடு நின்று விடாமல் அதன் மூலம் இரண்டு ஊர்களுக்குள் எப்படியான உடன்பாடு இருக்கிறது என்கிற நடைமுறை உண்மையும், ஜல்லிக்கட்டு […]

Read More

திருட்டுக் கதை புகாரில் சிக்கவிருக்கும் பொன்ராம் சசிகுமார்

by on December 2, 2019 0

சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரத்’தை மிஞ்சிய ஒரு கதை அதற்குப்பின் இதுவரை தமிழில் வந்ததில்லை என்று சொல்லலாம். ஏன்..? அவரே கூட அதை மிஞ்சிய ஒரு கதையை இதுவரை எழுதவில்லை. ஆனால், எதனால் அவர் ரசிக்கப்பட்டாரோ அதை மறந்து தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகக் காட்டிக்கொள்ள தேய்ந்து தேய்ந்து வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள் வந்துவிட்ட அவர் இப்போது ஒரு திருட்டுக்கதையில் நடித்து வருவதாக வந்த செய்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அவரை அப்படி சிக்க வைத்திருப்பவர் இயக்குநர் பொன்ராம். அவர் […]

Read More

சூர்யா தயாரிக்கும் அடுத்தபடம் சசிகுமார் ஜோதிகா நடிக்க தொடங்கியது

by on November 28, 2019 0

தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் தரமான வெற்றிப்படங்களை தந்து வரும் நடிகர் சூர்யாவின் 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த பட பூஜை, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் இன்று  காலை (நவம்பர் 28) நடத்தப்பட்டது. மிக வித்தியாசமான படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி கூட்டணியில் சூரி, கலையரசன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கிறார்கள்.   கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக இந்தப் படம் […]

Read More

எம்ஜிஆர் மகன் ஆகும் சசிகுமார் ஷூட்டிங் தொடக்கம்

by on September 25, 2019 0

கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றி பெற்றவர் இயக்குநர் பொன்.ராம். அவரோடு இப்போது சசிகுமார் கைகோர்த்துள்ளார். இந்தக் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தேனியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. ’எம்.ஜி.ஆர் மகன் ‘என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக களமிறங்கிறார் மிருணாளினி ரவி. கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகிய பணிகளைக் கவனிக்கிறார் […]

Read More
  • 1
  • 2