September 15, 2025
  • September 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சுசீந்திரனின் கென்னடி கிளப் சீனாவில் அபார விலைக்கு விற்றது
November 21, 2018

சுசீந்திரனின் கென்னடி கிளப் சீனாவில் அபார விலைக்கு விற்றது

By 0 1027 Views

சுசீந்திரன் இயக்கித்தில் வெளியாகவுள்ள ‘கென்னடி கிளப்’ சீனமொழியில் டப்பிங் செய்யப்படுகிறது. சீனச் சந்தையில் இந்தியப்படங்களுக்கு வரவேற்பு இருக்கும் நிலையில் சீன மொழியில் டப்பிங் செய்வதும் சேர்ந்து கொள்ள இப்படத்தின் டப்பிங் உரிமம் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே விளையாட்டு, தடைகளை முறியடிப்பது, சாதனைகள் புரிவது, போன்ற படங்கள் அனைவரையும் ஈர்க்கும். அப்படி ‘கென்னடி கிளப்’ப்பின் களம் ஈர்க்கப்பட்டுதான் சீனாவில் இவ்வளவு பெரியத் தொகைக்கு இப்படம் விற்பனையாகியுள்ளது.

இப்படம் நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கான கபடி போட்டியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

பாரதிராஜா-சசிகுமார்-சுசீந்திரன் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது சர்வதேச சந்தையிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் ஒரு உதாரணம்தான் சீனச் சந்தையில் இவ்வளவு பெரிய தொகைக்கு இப்படம் விலை போயிருப்பது.

மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தைக் கொண்டு உருவாகியுள்ள ‘கென்னடி க்ளப்’பில். சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், ‘புதுவரவு’ மீனாக்ஷி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்ம்ரிதி, சௌந்தர்யா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படம் 2019-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.