January 28, 2026
  • January 28, 2026
Breaking News
June 18, 2019

அடுத்த தலைமுறை நாயகர்களை குறிவைக்கும் சூரி

By 0 854 Views

என்னதான் காமெடி நடிகர்களுக்காகப் படம் ஓடினாலும் அவர்கள் ஒரு ஹீரோவுடன் இணைந்துதான் நடிக்க முடியும். அப்படித்தான் அவர்கள் காலம் கடந்தும் வளரும் நாயகர்களுடன் கைகோர்த்துக் கொள்வார்கள்.

வடிவேலுவும், சந்தானமும் ஹீரோ ஆகிவிட்ட பிறகு சூரியின் காட்டில் அடைமழை அடித்தது. ஆனால், அவர் ‘சிக்ஸ் பேக்’ வைத்துக் கொண்ட காரணத்தால் அவரும் தங்களுடன் மல்லுக்கு நிற்பாரோ என்று பல ஹீரோக்களும் அவரைத் தவிர்த்து விட்டதாகவே தோன்றுகிறது. அந்த இடத்தை இப்போது யோகிபாபு ஆக்கிரமித்து வருகிறார்.

Sarbath

Sarbath

ஆனால், நல்லவேளை சூரி அப்படி ஹீரோவாக நடிக்க எந்தத் திட்டமும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், சம்பாத்தியத்துக்கு…? அதற்குதான் அவர் தனக்கு அடுத்த தலைமுறை நாயகர்களைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார் என்று தெரிகிறது.

அதை உறுதிப்படுத்துவதைப் போல் இப்போது ‘பரியேறும் பெருமாள்’ கதிர் நாயகனாகும் ‘சர்பத்’ படத்தில் அவருடன் இணைந்து காமெடி செய்கிறார். இதுவும் நல்ல யோசனைதான்…

மற்றபடி சர்பத் படத்தை அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்குகிறார். அதே பெயரில் ஒளிப்பதிவாளரும் இந்தப்படத்தில் இருப்பது சிறப்பு. கதாநாயகியாக ரகசியா அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து, ஆகியோர் நடிக்கிறார்கள்.

“படத்தில் நடக்கும் சூழலும் படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும் ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைத்துக் கொண்டாட வைக்கும்” என்கிறார் இயக்குநர். இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்று வட்டாரங்களிலும், ஒருசில முக்கிய காட்சிகள் சென்னையிலும் படமாக்கப்பட்டுள்ளன.

வெயிலுக்கு இதமா ஐஸ் போட்டு ‘சர்பத்’ தாங்க..!

Sarbath Kathir Ragasia

Sarbath Kathir Ragasia