தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார்.
இதுதொடர்பாக அவர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியையும், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், பாஜக அதிருப்தியாளர்களான முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சந்திரசேகர் ராவைத் தொடர்ந்த சின்ஹாக்களின் சந்திப்பு மூன்றாவது அணியை அமைக்க வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.