January 24, 2025
  • January 24, 2025
Breaking News
  • Home
  • அரசியல்
  • இந்தியா
  • ஓட்டு போடாதவர்களை தூக்கி வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வையுங்கள் – எடியூரப்பா
May 6, 2018

ஓட்டு போடாதவர்களை தூக்கி வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வையுங்கள் – எடியூரப்பா

By 0 1033 Views

கர்நாடகா தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மிகத் தீவிரமாக தங்கள் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் சொனியாவும் வரும் 8ம்தேதி ஒரே நாளில் பிரச்சாரம் செய்கின்றனர்.

இந்நிலையில், பெலகாவியில் நேற்றைய பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, முதல்வர் சித்தராமையா போட்டியிடும் பதாமி, சாமுண்டேஸ்வரி ஆகிய 2 தொகுதிகளிலும் தோற்பார் என்றார். எனவே அனைவரும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டினார்.

அத்துடன் நிற்காமல், யாரெல்லாம் ஓட்டு போட வராமல் இருக்கிறார்களோ அவர்கள் வீட்டுக்குப் போய், அவர்களின் கை, கால்களைக் கட்டி தூக்கி வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வையுங்கள் என்றும் அதிரடியாக பேசியுள்ளது தேர்தல் களத்தை மேலும் சூடாக்கி இருக்கிறது.

கர்நாடக சட்டசபைக்கு வரும் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.