January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தன்னை நீக்கிய மாநாடு தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி
August 14, 2019

தன்னை நீக்கிய மாநாடு தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி

By 0 1067 Views

நடித்து நல்ல பெயர் எடுக்கிறாரோ இல்லையோ, வம்பு வளர்த்தே பெயரெடுப்பதில் சிம்புவுக்கு நிகர் சிம்புதான் – இல்லையென்றால் சிம்புவுக்கு நிகர் ‘எஸ்டிஆர்’தான் எனலாம்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் அவருக்கு ஒரு படம் பண்ணித் தருவதாக வாகுறுதி தந்து அந்தப்படத்துக்கு இயக்குநராக வெங்கட்பிரபுவை ஒப்பந்தம் செய்ய வைத்து, படத்துக்கு ‘மாநாடு’ என்று பெயர் வைத்தார்கள். கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்தும் சிம்பு சரியாக ஒத்துழைக்காத காரணத்தினால் அவரைத் தன் படத்திலிருந்து நீக்குவதாக நொந்து போய் அறிவித்தார் சுரேஷ் காமாட்சி.

ஆனாலும், ‘மாநாடு’ படத்தை அதே வெங்கட்பிரபு இயக்கத்தில் வேறு நடிகரை வைத்து தயாரிக்கவிருப்பதாகவும் விரைவில் அதை அறிவிப்பேன் என்றும் கூறியிருந்தார் அவர்.

இந்நிலையில் தன்னை நீக்கிய தயாரிப்பாளருக்கு நூதனமான முறையில் பதிலடி கொடுக்க விரும்பிய சிம்பு தங்கள் குடும்ப நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் ‘மகா மாநாடு’ என்ற படத்தைத் தயாரித்து தான் அதில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு தரச் சொல்லியிருக்கிறார்.

‘மகா மாநாடு’ படத்தின் பட்ஜெட் 125 கோடியாம். படம் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவருமாம். 

அந்தப்படத்திலாவது சிம்பு ஒழுங்காக நடித்தால் சரி..!