வரும் பொங்கல் ஏகத்துக்கு கோலாகலமாக இருக்கும் போலிருக்கிறது. ஏற்கனவே பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’ வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் அவர் படத்துடன் அவரது மருமகனான தனுஷின் ‘பட்டாஸ்’ படமும் பொங்கல் போட்டியில் குதிக்கும் எனத் தெரிந்தது. ரஜினி ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையால் தனுஷ் அவருடன் போட்டியிட்டது ஆச்சரியமில்லை.
ஆனால், டிசம்பரில் வெளியாவதாக இருந்த சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படம் சில தொழில் நுட்ப காரணங்களால் தள்ளிபோய் அதுவும் பொங்கலுக்கு வெளியாவதாக நம்பப்படுகிறது.
Sumo Release Poster
இதுவே ஆச்சரியத்தைத் தர, இப்போது மிர்ச்சி ஷிவா நாயகனாக நடித்திருக்கும் ‘சுமோ’ படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருகிறது.
போட்டி ஆரோக்கியமானதுதான். எல்லாப் படங்களும் வெற்றியடைய வேண்டியதுதான். ஆனால், யாருடன் யார் மோதுவது என்று ஒரு கவனமும் முக்கியம் அல்லவா..?
முக்கியமாக இத்தனைப் படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்குமா..?