January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • திருநங்கைகளுக்கு வீடுகள் கட்ட அக்ஷய்குமார் ஒன்றரை கோடி உதவி
March 1, 2020

திருநங்கைகளுக்கு வீடுகள் கட்ட அக்ஷய்குமார் ஒன்றரை கோடி உதவி

By 0 844 Views

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் 2. ஓ படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு மிகவும் பரிச்சயமானவர் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார்.

இந்தியில் பல வருடங்களாக முன்னணி ஹீரோவாக நடித்து வரும் இவர் இப்போது நம்மூர் நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகும் ‘ லக்ஷ்மி பாம் ‘ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி சக்கை போடு போட்ட படம் காஞ்சனா. மூன்று பகுதிகளாக வெளிவந்து மூன்றுமே சூப்பர் ஹிட்டான காஞ்சனாவை தான் இப்போது ராகவா லாரன்ஸ் இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் இயக்கி வருவது தெரிந்த விஷயமாக இருக்கலாம்.

இதற்கிடையில் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளை சிறப்பு தகுதி வாய்ந்த குழந்தைகளுக்கும், திருநங்கைகளுக்கும் பல உதவிகள் செய்து வருவது உலகறிந்த விஷயம்.

லக்ஷ்மி பாம் படத்தின் படப்பிடிப்பில் ஒருமுறை திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை அக்ஷய்குமார் இடம் ராகவா லாரன்ஸ் கூறியிருந்தாராம்.

அப்போது அதில் அக்கறை காட்டிய அக்ஷய்குமார் எதுவும் யோசிக்காமல் அப்போதே அந்தத் திட்டத்துக்கு தன் சார்பில் ஒன்றரை கோடி ரூபாய் நிதி உதவி செய்வதாக அறிவித்து இருக்கிறார்.

இதற்காக தன் அறக்கட்டளை சார்பில் அக்ஷய் குமாருக்கு திருநங்கைகளுடன் சென்று நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் இது குறித்து தன் மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.

அத்துடன் விரைவில் திருநங்கைகளுக்கான வீடுகள் கட்டும் திட்டத்திற்கு பூமி பூஜை நடத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

நல்ல திட்டம் நல்ல உதவி..!