October 27, 2025
  • October 27, 2025
Breaking News
January 19, 2020

நடிகை விபத்தில் கார் டிரைவர் மீது வழக்குப் பதிவு

By 0 793 Views

இந்திய நடிகையான ஷபானா ஆஸ்மியைத் தெரியாதவர்கள் கடந்த தலைமுறையில் இருக்க முடியாது. பெரும்பாலும் இந்திப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் நடித்து வந்த இவர் இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ கிடைக்கப்பெற்றவர்.

அத்துடன் அவரது அற்புதமான நடிப்பாற்றலுக்காக ஐந்துமுறை தேசிய விருதும் பெற்றவர். அது மட்டுமல்லாமல் பல சர்வதேச விருதுகளும் ஐந்து முறை பிலிம்பேர் விருதுகளும் பெற்றவர். 

Shabana Azmi Injured in an Accident

Shabana Azmi Injured in an Accident

இப்போது 70 வயதாகும் அவர் நேற்று இரவு காரில் மும்பை புனே சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவர் சென்ற கார் எதிர்பாராத விதமாக முன்னே சென்ற டிரக் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் ஷபானா ஆஸ்மியும், டிரைவரும் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஷபான ஆஸ்மிக்கு தலையில் காயமும், முதுகெலும்பில் லேசான சிதைவும் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் டிரக் டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷபானா ஆஸ்மி சென்ற காரை அதிக வேகத்தில் ஓட்டியதாக டிரைவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.